ஏழு கடல் ஏழுமலை திரைவிமர்சனம்
நடிகர்கள் : நிவின் பாலி, அஞ்சலி, சூரி, மற்றும் பலர்.
இசை : யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவு : N. K. ஏகாம்பரம்,
இயக்கம் : ராம்,
தயாரிப்பு : சுரேஷ் காமாட்சி.

கதாநாயகன் நிவின் பாலி பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து சாக வரம் பெற்று மனிதனாக வாழ்ந்து வருகிறார் தனக்கு நிரந்தரமான பெயர் இல்லாமல் அவருக்கு காலங்கள் மாறினாலும் உலகம் மாறினாலும் ,ஆனால் அவர் மனதில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாத ஒன்றை ஒன்று அவர் காதல் மட்டுமே அவர் காதலிக்கும் அந்த பெண்ணை ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்து தன் காதலை வெளிப்படுத்தி வாழ்ந்து கடந்தும் வருகிறார் இப்படி இந்த காலத்தில் அவர் தன் காதலியை தேடி ஒரு ரயிலில் பயணிக்கிறார் . அந்த அந்த ரயில் சூரியும் பயணிக்கிறார், இருவர் மட்டுமே ரயில் பெட்டியில் பயணிக்கிறார்கள் கூடவும் ஒரு சின்ன எலியும், கதாநாயகன் பார்ப்பதற்கு விசித்திரமான ஆளாக இருப்பதால் சூரிக்கு மனதில் ஒரு ஐயம் நிவின் பாலியால் பல இன்னல்கள் சந்தித்து பயத்துடனே பயணிக்கிறார் இறுதியில் அவர் சொந்த ஊருக்கு சென்றாரா இல்லையா நிவின் பாலி தோற்றம் சொல்ல வர கருத்து என்ன என்றுதான் மீதி கதை.
நிவின் பாலி இந்த கதாபாத்திரத்திற்கு பெரும் முயற்சி செய்து இருக்கிறார், பெரிதும் வசனம் இல்லாமல் தன் உடல் மொழி வழியாக தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார்.
குடும்பத்தின் எதிர்காலத்திற்காக வெளிநாட்டில் பல ஆண்டுகள் உழைத்துவிட்டு, தனது சொந்த ஊருக்குத் திரும்பும் ஒரு சாதாரண மனிதனாக சூரி நடித்துள்ளார்.
ரயிலில் நிவின் பாலியின் கதாபாத்திரத்தை அவர் எழுப்பும் தருணத்தில் தொடங்கும் இவர்களது சந்திப்பு, பின்னர் ஒரு நீண்ட வாழ்க்கைப் பயணமாக மாறுகிறது.
சூரியின் இயல்பான நடிப்பும், அவரது வசன உச்சரிப்பும் பல காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் நிவின் பாலியின் கதாபாத்திரத்திடம் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளை அவர் கேட்கும் காட்சிகள், படத்தின் மிக முக்கியமான பகுதிகளாக அமைகின்றன.
அந்த உரையாடல்கள் கதாபாத்திரங்களுக்கு இடையேயான பேச்சாக மட்டும் இல்லாமல், பார்வையாளர்களிடமும் சில கேள்விகளை எழுப்புகின்றன.
கதாநாயகி அஞ்சலி இப்படத்தில் பெரிதும் பங்கு இல்லாமல் போனாலும் அவர் வரும் காட்சிகள் படத்தோடு ஒன்றிணைக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவும் செய்துள்ளார்.
ரயில் பயணம், இயற்கைக் காட்சிகள், காட்டுப்பகுதிகள் என ஒவ்வொரு காட்சியும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையின் கற்பனைத் தன்மையை வலுப்படுத்தும் வகையில் காட்சியமைப்பு அமைந்திருக்கிறது.
சில காட்சிகளில் வசனங்களை விட காட்சிகளே அதிகமாகப் பேசுகின்றன. இயற்கையை அதன் அழகோடு பதிவு செய்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் உணர்வுகளைத் தூக்கிப் பிடிக்கிறது. குறிப்பாக கதாபாத்திரங்களின் தனிமை, காதல் மற்றும் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காட்சிகளில் பின்னணி இசை சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இயக்குனர் ராம் படைப்பின் மூலமாக அவர் கூற வரும் கருத்து எத்தனை ஆண்டு காலங்கள் ஆனாலும் அனைத்து உயிரும் சமம் என்று சொல்ல வந்த கருத்து இப்ப படத்தின் பலம் நிச்சயம் இப்படி ஒரு ஒரு படைப்பை படைப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும் ஒரு சாதாரண ரயில் பயணத்தில் இருவரை வைத்து இவ்ளோ பெரிய பலம் வாய்ந்த கருத்தை கூற வந்தது மிக சிறப்பு.
மொத்தத்தில் இந்த ஏழு கடல் ஏழுமலை எவ்வளவு பெரிது என்றாலும் அதைவிட பிற உயிரினத்தில் செலுத்தும் அன்பே பெரிது என்று சொல்ல வந்திருக்கும் இந்த படைப்பு.
