அன்பில் அவன் திரை விமர்சனம் 

cinema news movie review

  அன்பில் அவன் திரை விமர்சனம் 

நடிகர்கள் : அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், ரேவதி,கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், மற்றும் பலர்.

இசை : கோவிந்த் வசந்தா,

ஒளிப்பதிவு : கௌதம் ராஜேந்திரன்,

இயக்கம் : கார்த்திகேயன்,

தயாரிப்பு : ஆர். கருணாமூர்த்தி, அசோக்செல்வன், அபிநயா செல்வம்.

கதாநாயகன் நாயகியும் கல்லூரி காலகட்டத்தில் இருந்து காதலித்து வருகிறார்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வாழ்ந்து வருகிறார்கள்  அவர்களின் காதல் திருமணம் வாழ்க்கை அழகாக நகருகின்றது, கதாநாயகனுக்கு தன் மனைவிக்கு  அவள் ஆசைப்படி வாழ்க்கை தர முடியாமல் போகிறது என்று  உணர்கிறார், அவருக்கு சொந்தமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் எண்ணம் வருகிறது அதை தன் காதல் மனைவியிடம்  கூறி கலந்து பேசி முடிவு எடுக்கிறார்கள் சென்னையில் வேலையை விட்டு ஒரு மலைப்பகுதியில் தேர்ந்தெடுத்து செல்கிறார்கள் அங்கு ஒரு பழைய பங்களாவை பார்த்து அதை கடன்  மூலமாக வாங்கி சுற்றுலா வருபவர்களுக்கு   தங்கும்படியான ஒரு ஹோம் ஸ்டேஜ் தயார் செய்து வருகிறார்கள் அங்கு உள்ள எம்எல்ஏவுக்கு ஏற்கனவே அந்த பங்களா மீது ஒரு ஈர்ப்பு உள்ளது அதை எப்படியாவது அடைய வேண்டும் என்று பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார் அது அவருக்கு கிடைக்காமல் போகிறது  இவர்களுக்கு  உதவி செய்வது போல் அந்த பங்களாவை   அவர் அடைய ஒரு திட்டம் தீட்டுகிறார், பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதி கதை இவரிடம் இவர்களால் அந்த பங்களாவை மீட்டார்களா இவர்கள் நினைத்ததை செய்து முடித்தார்களா என்பது தான் இறுதி கட்டம்.

குறிப்பாக, முதல் பாதியில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் அவர்களது உணர்வுகளையும் நெருக்கமாகக் காட்டிய விதம் இரண்டாம் பாதியில் குறைந்து, ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் சம்பவங்கள் முன்னிலை பெறுகின்றன. இதனால் கதையுடன் பார்வையாளருக்கு ஏற்பட்டிருந்த உணர்வுப்பூர்வமான தொடர்பு சில இடங்களில் தளர்கிறது.

கதாநாயகன் அசோக் செல்வன் தன் பணியை சிறப்பாக செய்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு காதலிக்கு காதலனாக வரும் காட்சிகளும் இரண்டாம் பாதையில் ஆக்சன் ஹீரோவாக மாறுவதும் தன் நடிப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ப்ரீத்தி முகுந்தனும் கதாபாத்திரத்தின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருக்கும் இடையேயான காட்சிகளே படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு வலு சேர்க்கின்றன.

படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் இசை படத்தின் காதல் காட்சிகளுக்கு மென்மையையும், த்ரில்லர் காட்சிகளுக்கு பதற்றத்தையும் சேர்க்கிறது. பாடல்கள் ரசிக்கும்படியாக இருப்பதுடன், பின்னணி இசையும் பல காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. எதிர்பாராத வகையில் இடம்பெறும் மசாலா பாடல்களும் படத்தின் வணிகத் தன்மைக்கு துணைபுரிகின்றன.

ஒளிப்பதிவும் குறிப்பாக குறிப்பிடத்தக்கது. மலைப் பிரதேசப் பின்னணியைப் பயன்படுத்தியிருக்கும் விதம் படத்திற்கு அழகையும், அதே நேரத்தில் ஒரு மர்மமான சூழலையும் உருவாக்குகிறது. பங்களாவைச் சுற்றிய காட்சிகளிலும் அந்தச் சூழல் கதையின் த்ரில்லர் தன்மையை அதிகரிக்கிறது.

மொத்தத்தில் அன்பில் அவன் ஒரு நடுத்தர வர்க்கத்தின் கனவின் அடையாளம்.