பத்தா திரைவிமர்சனம்
நடிகர்கள் : விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிரதீவ ராஜ், ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்தர், மற்றும் பலர்.
இசை : சாய் அபயங்கர்,
ஒளிப்பதிவு : செல்வகுமார், S. K
இயக்கம் : பாலாஜி தரணிதரன்.
தயாரிப்பு : முராத் கெதானி & பிரியா அட்லி, அலோக் ஜெயின், அஜித் அந்தாரே.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதாவது 1986 மெட்ராஸ் மாகாணத்தில் ஈவு இரக்கம் இல்லாமல் மதிப்பு மரியாதை இல்லாமல் அடிதடி செய்யும் ஒரு ஜில்லா தாதாவாகவும் வலம் வருகிறார் ஒரு நாள் பத்தா ஆள் இல்லாமல் இருக்கும் பள்ளிக்கூடத்தின் கழிவறையில் இருக்க அதை கண்ட ஒரு சிறுவனால் அடைக்கப்படுகிறார், இப்படி நாட்கள் செல்ல அவர் குடும்பத்தினரும் மற்றும் பழகினவரும் தேட ஆரம்பிக்கிறார்கள் அவர்களால் இறுதிவரை எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போகிறது ஆனாலும் சிறுவன் தினந்தோறும் திறந்து விட வேண்டும் என்று வருகிற போதெல்லாம் அந்த பத்தாவின் முரட்டுத்தனமான மிரட்டலை கேட்டு அங்கிருந்து பயந்து ஓடி விடுகிறான். அந்த சிறுவனும் ஒரு நாள் தைரியத்தை வரவைத்து திறந்துவிடலாம் என்று வருகிறான் ஆனாலும் எதிர்பாராத விதமாக பத்து மயங்கி விழுந்து கிடப்பார் இதை கண்டு வெளியே ஓடிப் போய் ஒரு நபரிடம் கூறி விடுவான் பிறகு என்ன நடந்தது இப்படி ஏன் நடந்தது என்று தான் மீதி கதை.
விஜய் சேதுபதி பத்தா என்ற கதாபாத்திரத்தில் தன் வழக்கம் போல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பத்தாவின் மனைவியாக நடித்துள்ள லிஜோமோல் ஜோஸ், குடும்பக் காட்சிகளுக்கு தேவையான உணர்வை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். கணவன்-மனைவி உறவில் இருக்கும் நெருக்கமும் இடைவெளியும் அவரது நடிப்பில் வெளிப்படுகிறது.
அந்த சிறுவன் நடிப்பை வர்ணிக்க முடியாத அளவிற்கு சிறப்பாகவே செய்துள்ளார் அந்த பயத்தோடு நடித்திருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் நம் மனதில் பதிகிறார். படம் முழுக்க சிறுவனின் நடிப்பு ரசனையாக ரசிக்கும்படியாகவே அமைந்திருக்கிறது.
சாந்தி பாலச்சந்திரன், விஷ்ணு கோவிந்தன், அர்ஜுன் சிதம்பரம், ஹரிகிருஷ்ணன், அஜய் கோஷ் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
சாய் அபியங்கரின் இசை படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு துணையாக நிற்கிறது. குறிப்பாக ரெட்ரோ பின்னணியை உணர்த்தும் இசையும் குடும்பக் காட்சிகளில் இடம்பெறும் இசையும் கதைக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன
ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே., அந்தக் காலகட்டத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார். பழைய மெட்ராஸ் வாழ்க்கை முறையை திரையில் உணரச் செய்வதில் ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஒரு குறிப்பிட்ட காலத்தை திரை காட்சியாக அமைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல மிகவும் கச்சிதமாக சிறப்பாகவே அதை தந்துள்ளார் அவர் சொல்ல வந்த கருத்து பலம். கொஞ்சம் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
மொத்தத்தில் இந்த பத்தா கல்லுக்குள் ஈரம் இருப்பது உறுதி செய்திருக்கிறார்.
