பியார் பிரேமா கல்யாணம்  திரை விமர்சனம்  

cinema news movie review

பியார் பிரேமா கல்யாணம்  திரை விமர்சனம்  

நடிகர்கள் :இளன், சான்வி மேக்னா, செந்தில், ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ,யோகி பாபு, மற்றும் பலர்.

இசை : யுவன் சங்கர் ராஜா,

ஒளிப்பதிவு :தினேஷ் கே. பாபு,

இயக்கம் : இளன்.

தயாரிப்பு : ஸ்ரீநிதி சாகர்.

பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ படங்களை இயக்கிய இளன், இந்தப் படத்தை இயக்கியதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகன் துபாயில் வேலை செய்து வருகிறார் ஆனால் அவருக்கோ தன் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்றும் எண்ணத்தால் அந்த வேலையை விட்டு தான் சொந்த ஊருக்கு திரும்புகிறார் கண்டிப்பான அப்பாவின் வளர்பில் வளர்ந்து வருகிறார் இவருக்கு எப்படியாவது ஒரு திருமணத்தை செய்து வைத்துவிட வேண்டும் என்று பெற்றோர்கள் ஆவலுடன்  ஒரு பெண்ணை தேர்வு செய்து அதை இவர் பார்த்து விட்டு வர வேண்டும் என்று சொல்லுகிறார்கள், ஆனால் அங்கதான் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டு விடுகிறது இவர்க்கு பார்த்து வைத்த பெண்ணை பார்க்காமல் கதாநாயகியை மாறுதலாக சந்தித்து  விடுகிறார் பிறகு இருவருமே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்  இதை தன் பெற்றோரிடம் சொல்லி இரு வீட்டு சம்பந்தத்துடன்  திருமணம் நடைபெறுகிறது, இதன் பிறகு தான் கதையின் ஆரம்பம் திருமணம் ஆனவுடன் பெண் கணவர் வீட்டுக்கு செல்வது தான் வழக்கம் ஆனால் இக்கதையில் அது வித்தியாசமான முயற்சி கொண்டு உள்ளார் ஏன் மாப்பிள்ளை  பெண் வீட்டில் வந்து இருக்கக் கூடாதா என்று கதை ஆரம்பிக்கிறது  இறுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட சண்டைகள் சலசலப்புகள் சுமூகமான முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதுதான் மீதி கதை.

கருத்து புதிதாக இருந்தாலும், அதை முழுமையாக சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதில் படம் சில இடங்களில் தடுமாறுகிறது.

முதல் பாதியில் காதல், சமூக வலைதளப் பிரச்சனை போன்ற விஷயங்கள் அதிக இடத்தை எடுத்துக்கொள்கின்றன. படத்தின் பிரதான பலமான ‘வீட்டோடு மாப்பிள்ளை’ பகுதி தொடங்கிய பிறகுதான் கதையின் உண்மையான சுவாரஸ்யம் வெளிப்படுகிறது.

சில காட்சிகளில் கருத்தை வலியுறுத்தும் நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. இதனால் இயல்பாக நகர வேண்டிய சில காட்சிகள், ஒரு கருத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்திருப்பது தெரிகிறது. இயக்குநராக அவரது முயற்சி கவனிக்கத்தக்கது.

ஆனால் கதாநாயகனாக அவர் வெளிப்படுத்த வேண்டிய சில உணர்வுகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

குறிப்பாக மன உளைச்சல், குடும்ப அழுத்தம் போன்ற உணர்ச்சிகரமான தருணங்களில் நடிப்பில் இயல்புத்தன்மை குறைவாகத் தெரிகிறது.

இருப்பினும் கதையின் பெரும்பகுதி அவரைச் சுற்றியே நகர்வதால், கதாபாத்திரத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை பாராட்டுக்குரியது.

பவியாக நடித்துள்ள சான்வீ மேக்னா படத்தின் முக்கியமான பலங்களில் ஒருவர்.

காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், தாயைப் பிரிய முடியாமல் தவிக்கும் மகளாகவும், கணவரை நேசிக்கும் மனைவியாகவும், குடும்பத்துக்குள் உருவாகும் சிக்கல்களை சமாளிக்கும் பெண்ணாகவும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

ராதிகா சரத்குமார், செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்களது பங்களிப்பை இயல்பாக வழங்கியுள்ளனர்.

குடும்பச் சூழலில் உருவாகும் காட்சிகளில் இவர்களின் இருப்பு படத்தை பல இடங்களில் தாங்குகிறது.

யோகி பாபு வரும் காட்சிகள் வழக்கமான நகைச்சுவையை வழங்குகின்றன.

யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு பாடல்கள் பெரிதும் மனதில் பதியவில்லை,

மொத்தத்தில் இந்த பியார் பிரேமா கல்யாணம்  ஆண் பெண் புரிதல்.