லவ் ஓ லவ்’. திரைவிமர்சனம்
நடிகர்கள் :பவிஷ்,நாக துர்கா, கே எஸ் ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், மற்றும் பலர்.
இசை : foxn,
ஒளிப்பதிவு :முத்தையா,
இயக்கம் :மகேஷ் ராஜேந்திரன்,

கதையின் ஆரம்பம் காதலி தன்னை காதலித்து விட்டு தப்பி துபாய்க்கு செல்லப் போகிறார் என்று நாயகன் மீது புகார் கொடுக்கிறார்கள் இதனால் மாதர் சங்கமும் நாயகிக்கு துணை நிற்கிறார்கள் அந்த வாலிபரை காவலரிடம் சிக்க வைக்கிறார்கள் ஏன் அப்படி அவர் செய்தார் என்ன காரணம் என்று காவலரிடம் தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார் . நாயகன், நாயகி முதல் சந்திப்பிலேயே காதல் வசப்படுகிறார் இதனால் அவருக்கு காதலித்த பெண் தரும் சோதனைகளை அவர் எப்படி சமாளித்தார் அவர் காதலை எப்படி காப்பாற்றிக் கொண்டார் அப்படி என்னன்னா சோதனை சந்தித்தார் என்பது தான் மீதி கதை.
காதலியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையில், தனது வருமானத்தை விட அதிகமாகச் செலவழிக்கும் அவர், கடன், கிரெடிட் கார்டு பில்கள் போன்ற பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கிறார். இந்தப் பிரச்சினைகள் அவர்களின் காதலையும் காதல் என்பது பரிசுகளாலும் செலவுகளாலும் மட்டுமே நிலைத்திருப்பதில்லை; புரிதலும் பொறுப்பும் இருந்தால்தான் உறவு நீடிக்கும் என்ற கருத்து இயக்குனரின் சிறப்பாகும்.
படத்தின் முதல் பாதி முழுக்க காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் என நகர்கிறது. இரண்டாம் பாதியில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் மனப்போராட்டங்களும் கதைக்கு கூடுதல் வலிமையை அளிக்கின்றன. சில இடங்களில் திரைக்கதை வழக்கமான பாதையில் சென்றாலும், சுவாரஸ்யம் குறையாமல் கையாளப்பட்டுள்ளது.
நாயகன் பவிஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். நாகா துர்காவும் தனது கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் நம்பகமாக உருவாக்கியுள்ளார்.
கே எஸ் ரவிக்குமார் தன் கதாபாத்திரத்தில் ஒரு மிடில் கிளாஸ் அப்பாவாக எப்படி இருப்பாரோ அதை கதாபாத்திரமாகவே நம் மனதில் இடம் பிடிக்கிறார். செல்வராகவன் ஒரு காவல் அதிகாரியாக வருகிறார் படத்திற்கு அவர் ஒரு பக்க பலம் தான் வனிதா விஜயகுமார் மாதர் சங்கத் தலைவியாக படத்திற்கு முழு முயற்சியும் தந்துள்ளார்.
இசை அமைப்பாளரின் படத்தின் இசை அமைத்த பாடல்கள் கேட்க ரசிக்கும்படியாகவே உள்ளது மற்றும் பின்னணி இசையும் இனிமையாக உள்ளது.
ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி இளமையான தோற்றம் மிகச் சிறப்பு.
மொத்தத்தில் லவ் ஓ லவ் சாதாரண ஒரு காதல் படம் இல்லாமல் ஒரு காதலருக்குள் பொறுப்பையும் உணர்வுகளையும் சொல்ல வந்த திரைக்காவியம் .

