இதயம் முரளி திரைவிமர்சனம்
நடிகர்கள்:அதர்வா, நட்ராஜ்,ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர், பஹத் பாசில் , தமன், மற்றும் பலர்.
இசை : S.தமன்,
ஒளிப்பதிவு :மனோஜ் பரமஹாச,ch. சாய்.
இயக்கம் : ஆகாஷ் பாஸ்கரன்.

1991-ஆம் ஆண்டு வெளியான இதயம்’ அதே உணர்வுடன் இந்த கால கட்டத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட படம் தான் இதயம் முரளி ஒருதலைக் காதல், முதல் காதல், பிரிவு, ஏக்கம், மீண்டும் காதல் என ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் உணர்வுகளை மிகவும் இயல்பாகவும், மனதிற்கு நெருக்கமாகவும் படம் பதிவு செய்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் காதல் எப்படி மனிதனை மாற்றுகிறது என்பதையும், வாழ்க்கை நமக்காக வைத்திருக்கும் ஆச்சரியங்களை எளிமையாக எடுத்துச் சொல்கிறது.
கதாநாயகன் அதர்வா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்துஇருக்கிறார் குறிப்பாக காதல் சொல்ல வரும்போது சொல்ல முடியாமல் போக அந்த தருணத்தில் அவர் தவிப்பு அவர் திறமையை காட்டுகிறது. கதைக்கு ஒன்றிப்போனதால் அவர்கள் நடிப்பை கதைக்கு சிறந்த பலம்.

நாயகிகளாக வரும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாது லோஹர் இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். குறிப்பாக கயாது லோஹரின் இயல்பான நடிப்பும், திரை வசீகரமும் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. சிறப்புத் தோற்றத்தில் வரும் ஃபஹத் ஃபாசில் குறுகிய நேரமே வந்தாலும், தனது அனுபவம் மிக்க நடிப்பால் கதைக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறார்.
சுதாகர், திராவிட் செல்வம், விஜே ரக்ஷன், தமன் உள்ளிட்டோரின் நகைச்சுவை காட்சிகள் படம் முழுவதும் கலகலப்பை ஏற்படுத்துகின்றன. சிரிப்பும், காதலும், குடும்ப உணர்வுகளும் சரியான அளவில் கலந்திருப்பது படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் மாற்றியுள்ளது.
இசை எஸ். தமனின் படத்தின் பின்னணி இசை சிறப்பாகவே வந்துள்ளது படத்திற்கு அதுவும் ஒரு பலமாக அமைந்திருக்கிறது, பாடல்கள் ரசிக்கும் படியாகவே அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு நம் கண்களுக்கு கலர்ஃபுல் ஆகவும் காட்சிக்கு காட்சி அழகான ரசனை மிகச் சிறப்பு.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், காதலை வெறும் காதலர்களுக்கிடையேயான உறவாக மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் செய்யும் அழகான அனுபவமாக சித்தரித்திருக்கிறார். பழைய நினைவுகளையும், இன்றைய தலைமுறையின் உணர்வுகளையும் இணைத்து அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு நேர்த்தியான காதல் திரைப்படத்தை வழங்கியுள்ளார்.
மொத்தத்தில், ‘இதயம் முரளி காதல் உணர்வை பிரதிபலிப்பு அனைவருக்கும் பிடித்த படமாகவே இருக்கும்.

