ராவ் பகதூர் திரை விமர்சனம்

cinema news movie review

ராவ் பகதூர் திரை விமர்சனம்

நடிகர்கள் :சத்யதேவ், தீபா தாமஸ், விகாஸ் முப்பாலா, பாலா பரசர் மற்றும் பலர்.

இசை :ஸ்மாரன் சாய்,

ஒளிப்பதிவு :கார்த்திக் பர்மர்,

இயக்கம் : வெங்கடேஷ் மகா,

 ஒரு அரச காலத்தில் இருந்து 1990 காலகட்டம் வரையில் ராஜங்க அரசர் தன் மனதில் உள்ள நிற வெறி வேறுபாடு அவற்றுள் இருக்கும்  அதிகாரத்தின் ஆணவம்   மைய கருவாக வைத்து உருவாக்கபப்ட்டிருக்கும் திரைப்படம் ‘ராவ் பகதூர்’.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ராமப்பா ராவ் பகதூர் என்ற மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. மரணத்தை எதிர்நோக்கும் நிலையிலும், மன உளைச்சலாலும் குற்றவுணர்வாலும் தவிக்கும் அவரது வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் உண்மைகளே படத்தின் திரைக்கதையாக விரிகின்றன. கடந்த காலமும் நிகழ்காலமும் மாறி மாறி சொல்லப்படும் கதை, படத்தின் முக்கிய அம்சமாக அமைகிறது.

 

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வேறொரு நபரை அரண்மனைக்கு அழைத்து வந்து இவர்தான் குசுமப்பாவின் தந்தை என்று கூற இதை கேட்டு அதிர்ச்சி அடையும் நாயகன் ராவ் பகதூர் (சத்யதேவ்) இறந்தது தன்னுடைய மகன்தான் என்று சில ஆதரங்களை கொடுக்க இந்த வழக்கு நீதிமன்றம் செல்கிறது.

இறுதியில் ராவ் பகதூர் குசுமப்பா தன்னுடைய மகன்தான் என்று நீதிமன்றத்தில் நிரூபித்தாரா ? இல்லையா ? கடந்த 8 ஆண்டுகளாக வீட்டில் தனி அறையில் இருக்கும் ரேணுகா  வெளியே வந்தாரா ? இல்லையா ? என்பதே ‘ராவ் பகதூர்’ படத்தின் மீதிக்கதை.

ராமப்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யதேவ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்றவாறு வயது, தோற்றம், கோபம், அழுகை என அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒட்டுமொத்தப் முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து நிற்கிறார்.

சத்யதேவ் மனைவியாக நடித்திருக்கும் தீபா தாமஸ்  துணிச்சல் மிக்க கதாபாத்திரத்தில் கவனத்தை ஈர்க்கிறார் . படத்தின் பலம் தான்.

விகாஸ் முப்பாலா மற்றும் பாலா பரசர் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களை குறையில்லாமல் செய்திருக்கின்றனர். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தின் காலப்பின்னணியை நம்பகமாக உருவாக்க உதவுகின்றன.

இசையமைப்பாளர் ஸ்மரன் சாய் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. கார்த்திக் பர்மார் ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அரண்மனையில் நடக்கும் சம்பவங்களை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் வெங்கடேஷ் மஹா, இத்திரைப்படத்தில் சமூகத்தில் ஊறிப்போயுள்ள நிறவெறி மற்றும் வர்க்கப் பாகுபாடுகளை பற்றி பேசியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், ராவ் பகதூர் ஒரு துணிச்சலான, நேர்மையான கலைப் படைப்பு. இருப்பினும், படத்தின் அதிகப்படியான நீளம் மற்றும் முதல் பாதி மிக மெதுவாக நகர்வது படத்தின் மிகப்பெரிய குறையாக உள்ளது.

மொத்தத்தில் ‘ராவ் பகதூர்’ அழகான ரசனை.