அன்பே டயானா திரைவிமர்சனம்

cinema news movie review

அன்பே டயானா திரைவிமர்சனம்

நடிகர்கள் : பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன்,சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி மற்றும் பலர்.

இசை :பரத் சங்கர்

ஒளிப்பதிவு :ஷெல்லி கேலிஸ்ட்

இயக்கம் :பாரி இளவழகன்

தயாரிப்பு : மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நியோ கேசஸில் கிரியேஷன்.

 கதாநாயகன்  ஒரு கட்டுப்பாடான கலாச்சாரம், தெய்வீகம்,  ,தன் மக்கள் பாசம், என ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழும் குடும்பத்தில் ஒரு  குறும்புத்தனமான  இளைஞனாக  வாழ்ந்து வருகிறார், ஆனால் கதாநாயகி குடும்பமும் ஒரு ஆங்கில இந்தியன்   அப்படியே எதார்த்தமான சூழ்நிலையில் வாழ்கிறார். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள் கதாநாயகனுக்கு கதாநாயகியின் குடும்ப வழக்கையை அறிந்தவுடன் தன் குடும்பத்திற்கு தன் காதலியை ஏற்றுக் கொள்வாரா   என்று ஒரு சந்தேகத்தில் பயமும் ஆரம்பிக்கிறது இறுதியில் இவர்  காதலை ஒத்துக் கொண்டு குடும்பத்தில் இவர்கள் சேர்த்து வைத்தார்களா இல்லையா என்பதுதான் மீதி கதை அன்பே டயானா’வை உருவாக்கியுள்ளார். காதல், குடும்ப உறவுகள், நகைச்சுவை, சமூக அக்கறை ஆகிய அனைத்தையும் சமநிலையுடன் கலந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களை சலிப்பின்றி பயணிக்க வைக்கும் முயற்சியில் அவர் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

கதாநாயகனாக நடித்துள்ள பாரி இளவழகன், ஒரு சாதாரண இளைஞனின் காதல், குழப்பம், குடும்ப பாசம் ஆகிய அனைத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநராக மட்டுமல்ல, நடிகராகவும் நம்பிக்கை அளிக்கும் நடிப்பை வழங்கியுள்ளார்.

ரம்யா ரங்கநாதன் ‘மேஜிக் டயானா’வாக திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணத்திலும் ரசிகர்களை ஈர்க்கிறார். அவரது உடை, உடல்மொழி, ஆங்கிலோ இந்திய பெண்ணின் பேச்சு முறை என அனைத்திலும் சிறப்பான கவனம் செலுத்தப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அழகையும், இயல்பான நடிப்பையும் இணைத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

சேத்தன் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஒரு சாதாரண குடும்பத்தின் தந்தையாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் நகைச்சுவை மற்றும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளில் நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

ரோஜா கண்டிப்பான பொறுப்புள்ள தாயாக நம் பார்வைக்கு வலம் வருகிறார் படத்தில் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

பரிதாபங்கள் கோபி ஆரம்பத்தில் சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், இரண்டாம் பாதியில் கதையின் ஓட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றுகிறார்.

படத்தின் வசனங்கள் தனியே பாராட்டப்பட வேண்டியவை. பல இடங்களில் சிரிக்க வைக்கும் வசனங்கள் இருந்தாலும், சில வசனங்கள் நேரடியாக மனதைத் தொட்டுச் செல்கின்றன.

பரத் சங்கரின் இசை காட்சிகளுக்கு தேவையான உணர்வை அழகாக உருவாக்குகிறது. பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு ஒன்றிணைந்து பயணிக்கின்றன.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், குறைந்த பட்ஜெட்டிலும் பெரம்பூரை புதிய கோணத்தில் அழகாக பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாதியில் வரும் குடும்ப உணர்வுகள், காதலுக்காக போராடும் இளைஞர்களின் மனநிலை, பெற்றோர்களின் பார்வை, தலைமுறை இடைவெளி ஆகியவற்றை இயக்குநர் எந்தவித அதிரடி வசனங்களும் இல்லாமல் மிகவும் இயல்பாக சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

மொத்தத்தில் இந்த அன்பே  டயானா அனைத்து மக்களுக்கும் பிடித்தவளாக இருப்பாள்.