full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

100 படங்களுக்கு பிறகு விஸ்வாசம்!!

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாகிணைந்திருக்கும் “விஸ்வாசம்” படம் அறிவித்து நீண்ட நாட்கள் கழித்து தான், ஹீரோயின்
நயன்தாரா என்பதையே அறிவித்தார்கள். இருந்தாலும், இசையமைப்பாள யார் என்பது குறித்த இழுபறி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

முதலில் யுவன் ஷங்கர் ராஜா என்றார்கள். பிறகு யுவனே விலகிக் கொண்டதாக அறிவிப்பு வந்தது. மறுபடியும் அனிருத் தான் என்றார்கள். திடீரென
“விக்ரம் வேதா” புகழ் சாம் சிஎஸ்-இடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொன்னார்கள். ஆனால் இதுவரையில் இசையமைப்பாளர் யார் என்ற
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவே இல்லை.

எந்த அறிவிப்பும் இல்லாமல் தல ரசிகர்களோ பித்துப் பிடித்து கிடந்தார்கள். இப்போது திடீரென டி.இமான் தான் “விஸ்வாசம்” படத்தின்
இசையமைப்பாளர் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.

விஜய் நடித்த தமிழன், ஜில்லா படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தாலும், இதுவரையில் அஜித் நடித்த படத்திற்கு இமான் இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அந்தக் குறையை “விஸ்வாசம்” போக்கியிருக்கிறது.

100 படங்களுக்கு இசையமைத்த பிறகு, விஸ்வாசம் கிடைத்திருப்பது இமானுக்கு மாபெரும் பரிசு தான்!