full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

காதலிக்கு பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் கொடுத்த விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஷ்ணுவிஷால் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளான இன்று விஷ்ணு விஷால் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொள்ள உள்ளதை உறுதிப்படுத்தி உள்ள விஷ்ணு விஷால். இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “பிறந்தநாள் வாழ்த்துகள் ஜுவாலா கட்டா. வாழ்க்கையின் புதிய துவக்கம். நேர்மறையாக இருப்போம், நமக்கு, ஆர்யனுக்கு, நம் குடும்பங்களுக்கு, நண்பர்களுக்கு மற்றும் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் நல்ல எதிர்காலத்துக்காக உழைப்போம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதங்களும் எங்களுக்கு வேண்டும். நள்ளிரவில் மோதிரத்துக்கு ஏற்பாடு செய்த பசந்த் ஜெயினுக்கு நன்றி.” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.