full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

அம்மாடியோவ்… விக்ரம் அடுத்த படத்தின் இமாலய பட்ஜெட்!

விக்ரம் என்றாலே வித்தியாசமும், பிரம்மாண்டமும் தான். அவர் படத்தில் இருந்தாலே, படம் வேறு மாதிரியான வடிவம் பெற்று விடும். வெறுமனே நடிப்பாலேயே பிரம்மாண்டம் காட்டுபவருக்கு,
பிரம்மாண்டமான பட்ஜெட் கிடைத்து விட்டால்??

இதோ விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு இன்பச் செய்தி, “விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பட்ஜெட் 300 கோடியாம்!!”

நியூயார்க்கைச் சேர்ந்த “யுனைடெட் ஃப்லிம் கிங்டம்” என்ற நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அந்தப் படத்தில் தான் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில்
ஒரே நேரத்தில் தயாராகிறது. ஆர்.எஸ்.விமல் இயக்கும் இந்தப் படத்திற்கு “மகாவீரன் கர்ணன்” என்று தலைப்பிட்டுள்ளார்கள்.

வருகிற அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. உலகின் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிய இருக்கின்றனர். தற்போது இந்தி பதிப்பிற்கான முதற்கட்ட பணிகள்
தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

பொங்கலுக்கு “ஸ்கெட்ச்” ரிலீஸ், அதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் “சாமி ஸ்கொயர்” மற்றும் கவுதம் இயக்கத்தில் “துருவ நட்சத்திரம்” என விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் இந்த ஆண்டு.