full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் ஒரு 100-வது படத்தில் விஜய்!!

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தளபதி 62” படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு வேகமாக வேலை செய்து வருகிறது படக்குழு. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தினை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக விஜய் யாருடன் இணைவார்? என இப்போதே விவாதம் துவங்கிவிட்ட நிலையில், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை “சூப்பர் குட் பிலிம்ஸ்” தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான “சூப்பர் குட் பிலிம்ஸ்” கடைசியாக லாரன்ஸ் நடிப்பில் வெளியான “மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தைத் தயாரித்திருந்தது. அந்தப் படம் அவர்களுக்குத் 99-வது படமாகும். இந்நிலையில் தங்களது 100-வது படத்தை நடிகர் விஜயை வைத்து தயாரிக்க முடிவு செய்து, அவரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறது “சூப்பர் குட் பிலிம்ஸ்”. அதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதை உறுதிப்படுத்தி இருக்கும் நடிகர் ஜீவா, அந்தப் படத்தில் தானும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறார். ஜீவா ஏற்கனவே விஜய்யுடன் “நண்பன்” படத்தில் நடித்திருந்தார். அதேபோல் “சூப்பர் குட் பிலிம்ஸ்” தயாரிப்பில் விஜய் நடித்த “ஜில்லா” படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

முன்னதாக “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்” நிறுவனமும் தங்களது 100-வது படத்தில் நடிகர் விஜயை நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.