full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

லக்கா மாட்டிக்கிச்சு.. உதயநிதி ஹேப்பி அண்ணாச்சி!!

உதயநிதி ஸ்டாலினுக்கு இது நல்ல காலம் போல.. பிரியதர்ஷன் இயக்கத்தில் “நிமிர்”, சீனு ராமசாமி இயக்கத்தில் “கண்ணே கலைமானே” என வரிசையாக தரமான இயக்குநர்களின் படங்களில் நடிப்பதென்றால் சும்மாவா??

“கண்ணே கலைமானே” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வெளியீட்டிற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தான், உதயநிதி அடுத்ததாக நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறார் என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

விசாரித்ததில், அது ஏற்கனவே சாந்தனு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் தான் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. முன்னதாக அந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்த பட நிறுவனம் பின்வாங்கிய காரணத்தால், உதயநிதியின் “ரெட் ஜெயண்ட் மூவிஸ்” மூலமாக தயாரிக்கவும் இருக்கிறாராம். மற்றபடி தொழிற்நுட்பக் கலைஞர்கள் யாரும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் தெரிகிறது.

இந்தப் படத்திற்காகத் தான் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.