கான்ஸ் பட விழாவில் சங்கமித்ரா அறிமுகம் – ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படமான சங்கமித்ரா திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களைக் கவரும் கதைக்களம் கொண்ட சங்கமித்ரா படம் கான்ஸ் பட விழாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி தனது அடுத்த படமான சங்கமித்ராவை பிரம்மாண்டமான முறையில் உருவாக்குகிறார். 8 ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை விவரிக்கும் […]

Continue Reading

கருப்பு ராஜா வெள்ளை ராஜாவுக்கு எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷாலும், கார்த்தியும் கைகோர்த்திருக்கும் படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். கதாநாயகியாக ‘வனமகன்’ படத்தில் நடித்துள்ள சாயிஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகர் ஆர்யாவும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. பிரபல நடிகரும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருமான அருண்பாண்டியன் ஒரு மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மறைந்த இயக்குனர் கே.சுபாஷின் கதைக்கு பிரபுதேவா […]

Continue Reading

வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை : `மாநகரம்’ சதீஷ்

நடிகர் சதீஷ் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருக்கிறார். என்றாலும் ‘மாநகரம்’ படம் தேடி வந்து பாராட்டும் அளவுக்கு இவருக்கு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. இது பற்றி சதீஷிடம் கேட்ட போது… “எனக்கு சொந்த ஊர் சென்னைதான். பள்ளி, கல்லூரி எல்லாமே இங்குதான். பி.பி.ஏ முடித்தேன். எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்தது. நான் முதலில் அறிமுகமான படம் ‘பட்டியல்’. அதில் விஷ்ணுவர்தன் சார் தான் என்னை அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே ஆர்யா, பரத்துடன் நடிக்கும் வாய்ப்பு. தொடர்ந்து […]

Continue Reading

மதுரைப் பெண்ணான அதிதி மேனனின் நம்பிக்கை

அமீர் இயக்கி வரும் படம் ‘சந்தனதேவன்’. இது ஜல்லிக்கட்டு கதை. இதில் ஆர்யா, அமீர், சத்யா, அதிதிமேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் 2 கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அதிதிமேனன் கூறும் போது, “சந்தனதேவன்’ படத்தில் சத்யா ஜோடியாக நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் பாவாடை தாவணி கட்டாத நான் இந்த படத்தில் முழுக்க முழுக்க பாவாடை தாவணி அணிந்து நடிக்கிறேன். மதுரை பெண் போல நான் இருக்க வேண்டும் என்று […]

Continue Reading

குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டரைப் போலவே, டீசரும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று […]

Continue Reading