சிம்புவுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் விவேக்!

விடிவி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் “சக்க போடு போடு ராஜா”. நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விவேக், சந்தானம் மற்றும் சிம்புவின் ரசிகர்களுக்கு “ தங்களுக்குப் பிடித்தவர்கள் பெயர் சொல்லும் போது மட்டும் கைதட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒரு விழாவென்று வந்துவிட்டால், யாருடைய பெயர் சொன்னாலும் கைதட்ட வேண்டும். அதுவே நல்ல ரசிகனுக்கான பண்பு” […]

Continue Reading

நிபந்தனைகளுடன் சந்தானத்திற்கு ஜாமீன்

கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கான சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில், சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியை சேர்ந்த, கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டராக தொழில் செய்து வரும் சண்முகசுந்தரத்திற்கும், சந்தானத்திற்கும் தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில், சந்தானம், வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்திற்குச் சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டதாகவும் மோதலில் அவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் தன்னை […]

Continue Reading

“ரியல் ஆக்‌ஷனில்” இறங்கிய நடிகர் சந்தானம்!

நகைச்சுவை நடிப்பிலிருந்து நாயகனாக வளர்ந்துள்ள நடிகர் சந்தானம் பாஜக பிரமுகரைத் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும், அதற்கு தமிழக பாஜக தலைவரின் கண்டனமும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படித்திருக்கிறது. முன்னதாக பண விவகாரத்தில் ஆத்திரமடைந்து கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த காரணங்களைக் கேட்டறிந்ததிலிருந்து.. சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டராக தொழில் செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து […]

Continue Reading

மெர்சலில் மெர்சல் காட்ட இருக்கும் சந்தானம்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக விஜய்யின் `மெர்சல்’ உருவாகி வருகிறது. அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் இப்படத்தில் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை […]

Continue Reading

அஜித் வழியை பின் பற்றும் சந்தானம்

  அஜித்தின் படங்களின் பாடல்கள், டீசர், டிரைலர் மற்றும் திரைப்படங்கள் அனைத்தும் வியாழக்கிழமை தினத்தில் வெளியாகி வருகிறது. இது அஜித்தின் செண்டிமெண்ட்டாக இருந்து வருகிறது. இந்நிலையில், அஜித்தின் வழியை பின் பற்றி இருக்கிறார் சந்தானம். சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பாக ஜெ.செல்வகுமார் தயாரித்திருக்கிறார். சென்னை, கோவா, தென்காசி மற்றும் துபாயில் […]

Continue Reading

சான்றிதழ் பெற்ற மகிழ்ச்சியில் சர்வர் சுந்தரம்

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி நடிகராக உயர்ந்தவர் சந்தானம். காமெடியனாக அவர் வலம் வந்த போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில், கதாநாயகனாக உயர்ந்துள்ள சந்தானம் நடிப்பில் தற்போது `சர்வர் சுந்தரம்’ படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தில்லுக்கு துட்டு படத்தில் அவருடன் இணைந்து […]

Continue Reading