மும்பை காலா 12ம் தேதி முதல் சென்னையில்

சங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், பா ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் ஒப்பந்தமாகி, மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடந்த சில வாரங்களாக மும்பையில் நடந்து வந்த ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுவிட்டார் ரஜினி. அவரைத் தவிர்த்து மற்ற அனைவரும் சென்னை திரும்பி விட்டனர். இந்நிலையில் ‘காலா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 10-ஆம் தேதி முதல் சென்னையில் […]

Continue Reading

ஹிந்திக்கு வாய்ஸ் கொடுக்கும் ரஜினி

ரஜினியின் ‘2.0’ படத்தைப் பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், இந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய முறையில் விளம்பரப்படுத்துகின்றனர். இதே போல் பல்வேறு வழிகளில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘2.0’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா’ குறித்து […]

Continue Reading

ரஜினிக்கு வில்லன் நானா?

  பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் `காலா’ படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, மீண்டும் ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி பாட்டீல் நடிக்கிறார். இவர்களுடன், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, சம்பத், ரவி […]

Continue Reading

‘காலா’வின் மிரட்டலான முதல் பார்வை

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘காலா’ என்று இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ‘கபாலி’ படத்தில் கபாலீஸ்வரன் என்ற பெயரை எப்படி ‘கபாலி’ என்று அழைத்தார்களோ, அதேபோல் இப்படத்தில் கரிகாலன் என்ற பெயரை சுருக்கி ‘காலா’ என்ற பெயரில் தலைப்பாக வெளியிட்டுள்ளார்கள். தலைப்பு வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி, ‘காலா’ படத்தின் 2 பர்ஸ்ட் […]

Continue Reading

தலைவர்164 படத்தின் டைட்டில் வெளியீடு

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கரிகாலன் என்பதன் சுருக்கமே காலா என படக்குழு விளக்கம் அளித்துள்ளது. இந்த தலைப்பை நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். […]

Continue Reading

சல்மான்கானால் கண்டுகொள்ளப்படாத பிரபலம்

ரஜினியின் புதிய படம் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார். இந்தி பட உலகில் இவர் பற்றி பல்வேறு புரளிகள் கிளம்பி உள்ளன. இந்தி நடிகர் அனுராக் கஷ்யப்புக்கும் நடிகை ஹீமா குரோஷிக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் பேசப்பட்டது. பின்னர் நடிகர் சல்மான்கானின் தம்பி சொஹைல் கானுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக சில மாதங்களாக பேசப்படுகிறது. ஹீமாவின் இந்த தொடர்பால் சொஹைல் கானுக்கும் […]

Continue Reading

ரஜினிகாந்துக்கு மிரட்டல் கடிதம்

மும்பையில் பிரபல தாதாவாக விளங்கியவர் ஹாஜி மஸ்தான். இவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பாரதீய சிறுபான்மையினர் பாதுகாப்பு கட்சியின் தலைவர் சுந்தர் சேகர் நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாரதீய சிறுபான்மையினர் பாதுகாப்பு கட்சியின் நிறுவனரான நான், ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன். சமீபத்தில் பத்திரிகைகள் மூலமாக, நீங்கள் இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து எனது தந்தையின் […]

Continue Reading

மீண்டும் இணைகிறது கபாலி அணி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்திலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளை பா.ரஞ்சித் மேற்கொண்டு வருகிறார். அதேபோல், நடிகர், நடிகையர் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அதில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ‘கபாலி’ […]

Continue Reading

மீண்டும் மும்பை தாதாவாக நடிக்கிறாரா ரஜினி?

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போன்றே, இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், தற்போது மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா காஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி, இப்படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையில் 1926-1994 இடைப்பட்ட காலத்தில் மக்களின் தலைவராகவும், மிகப்பெரிய டானாகவும் வலம்வந்தவர் ஹாஜி மஸ்தான். இவர் மிகப்பெரிய […]

Continue Reading