சசிகலா நியமனம் ரத்து : அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. (அம்மா) என்றும், அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) என்றும் 2 ஆக உடைந்த அ.தி.மு.க. சமீபத்தில் ஒன்றாக இணைந்தது. இதற்கு டி.டி.வி.தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் […]

Continue Reading

அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில்

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சசிகலா ஒப்புதலோடு தினகரன் நீக்கி வருவதோடு, தனது ஆதரவாளர்களை அந்தப் பதவிக்கு நியமித்தும் வருகிறார். பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் இருந்த அமைப்புச் செயலாளர் பதவியைப் பறித்த தினகரன், அந்தப் பதவிக்கு நடிகர் செந்திலை நியமித்தார். இன்று சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தினகரனை நடிகர் செந்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான் அனைத்துப் பிரச்னைகளையும் அவரே பார்த்துக்கொள்வார். முதலமைச்சர் […]

Continue Reading

அடுத்த வாரம் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை காணலாம்?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டதும், அ.தி.மு.கவின் இரு அணிகளுக்கு இடையிலான முட்டுக்கட்டை நீங்கி விட்டதாக கருதப்பட்டது. இதனால் தான் இரு அணிகளும் நேற்று இணைந்து விடும் என்ற தோற்றம் காணப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள சில மூத்த தலைவர்கள் மனதுக்குள் இருந்த எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் திடீர் சுனாமியாக தாக்கியதால் இரு அணிகள் இணைப்பில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பில் இழுபறி […]

Continue Reading

அணிகள் இணைப்பு குறித்து இன்று முடிவு : ஓ பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மீண்டும் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்றிரவு சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளனர். அப்போது அதிகாரப் பகிர்வுகள் மற்றும் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதில் ஒருமித்த […]

Continue Reading

வேதா இல்லம் நினைவிடமாகும் : எடப்பாடி பழனிச்சாமி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பொதுமக்கள் தரப்பிலும், அரசியல் வட்டாரத்திலும் பல்வேறு தரப்பிலும் சந்தேகங்கள் வலுத்தது. இதனால் மரணம் குறித்த நீதி விசாரணை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்பட வேண்டும் என்றும் […]

Continue Reading

விதிமீறிய முதல்வர் பதவியிழக்க நேரிடும் – டி.டி.வி தினகரன்

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பதவியில் செயல்பட இயலாது என அக்கட்சியின் தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக தினகரன் பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி தினகரன், “என்னை நீக்கியதாக வெளியான தீர்மானத்தில் வெறும் அதிமுக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி […]

Continue Reading

டிஐஜி ரூபா பணியிட மாற்றம் நிர்வாக ரீதியிலானது : சித்தராமையா

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் (அம்மா அணி) சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார். இது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக […]

Continue Reading

சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று காலை சந்தித்தார். தம்பிதுரையைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்து பேசினார். சசிகலாவை சந்தித்த பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. 122 எம்எல்ஏக்களும் எங்களுடனே உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம், யாரிடமும் சமாதானம் பேசத் தேவையில்லை.” என்று […]

Continue Reading

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றும் : எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-து விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து, “2011-12 முதல் 2015-16 முடிய ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 315 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன. […]

Continue Reading

டி.டி.வி. தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன் கடந்த 2-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளிவந்த தினகரனுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுநாள் சென்னை திரும்பிய போதும் விமான நிலையத்தில் தினகரனை அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். தினகரன் சிறை செல்வதற்கு முன்னாள் அவரைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக எடப்பாடி அணியினர் அறிவித்திருந்தனர். ஆனால் ஜாமீனில் விடுதலையான தினகரன் என்னை நீக்குவதற்கு பொதுச்செயலாளர் […]

Continue Reading