கமல்ஹாசனை சந்திக்கிறார் முதல்வர்

சென்னையில் நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், […]

Continue Reading

கோபம், பாதுகாக்கப்பட வேண்டியது : கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்களை டுவிட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் கமல்ஹாசனை அமைச்சர்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். தற்போது தனியார் டெலிவிஷனில் தொகுத்து வழங்கி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நடிகர்கள் சக்தி, பரணி, நடிகைகள் காயத்ரிரகுராம், ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோரை மீண்டும் பிக்பாஸ் மேடைக்கு அழைத்து கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர்கள் தங்களை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் […]

Continue Reading

எல்லாக் கேள்விகளுக்கும் வீடியோவில் விளக்கமளித்த ஓவியா

தனியார் தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபலமான நபர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களில் ஒருவராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படுத்தும் அவரின் இயல்பான குணமும், குறும்புத் தனமும் ஏராளமான பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தது. இந்நிலையில் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தால், தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாத அளவுக்கு மனஅழுத்தத்தில் இருந்த நடிகை […]

Continue Reading

மாறுவோம் மாற்றுவோம் : கமல்ஹாசன்

“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை” என்ற நம்மாழ்வார் கருத்துகளைப் பரப்பும் விதமாக உணவு சார்ந்த இயற்கை விவசாயத்தின் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து “கின்னஸ்” சாதனை நிகழ்த்தப்பட இருக்கிறது. வரும் ஆகஸ்டு 26 ம் தேதி திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிபூர் கிராமத்தில் இச்சாதனை நிகழவிருக்கிறது. இதில் ஏராளமான மாணவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என […]

Continue Reading

நாளை ரத்தப்புரட்சி ஏற்படும் : கமல்ஹாசன்

நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ தொண்டு நிறுவனம் சார்பில் ‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர். இந்த சாதனை நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள், சினிமா பிரபலங்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான விழிப்புணர்வு போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, இந்த சாதனைக்கு […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 21/7/2017

• ரஜினி, கமல் ஆகியோர் வெளியிடும் அரசியல் கருத்துக்கள், காவிரி, மீத்தேன் எதிர்ப்பு போன்ற பிரதானப் பிரச்னைகளில் இருந்து பொதுமக்களை திசை திருப்புவதாக கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு புகார் • குடியரசு தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி! • 3 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராம்நாத் வெற்றி: தோல்வியடைந்தாலும் மதச்சார்பின்மைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என மீராகுமார் பேட்டி. • புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து: […]

Continue Reading

இந்த ஆட்சியில் மட்டுமல்ல, முந்தைய ஆட்சியிலும் இப்படித்தான் : பார்த்திபன்

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பார்த்திபன், “ஓட்டு போட்ட மக்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. நான் அரசுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசவில்லை. இந்தந்த துறைகளில் இதுமாதிரி பிரச்சினைகள் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் அளிக்க வேண்டியது அமைச்சர்கள் பொறுப்பு. ஒரு துறையில் தவறு நடந்து விட்டது. மேற்கொண்டு நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று அவர்கள் பதில் சொல்லலாம். அதைவிடுத்து ‘நீங்கள் நிரூபியுங்கள்… பார்க்கலாம்’, என்று சொல்வது தேவையற்றது. சினிமாவில் இருக்கும் பலருக்குத் தைரியம் […]

Continue Reading

⁠⁠⁠தம்பி ஜெயக்குமார், எலும்பு வல்லுநர் எச்.ராஜா – வெளுத்து வாங்கும் கமல்!

நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் குறித்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகியிருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்களும், பாஜகவினரும் கடும் எதிர்வினை ஆற்றியிருந்தனர. இந்நிலையில், நேற்று அவர் டிவிட்டரில் எழுதியிருந்த கவிதையில் ‘முடிவெடுத்தால் யாமே முதல்வர்’ என்று சொல்லியிருந்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு பதிவையிட்டிருக்கிறார் கமல். அதில், “ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் […]

Continue Reading