full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

கோபம், பாதுகாக்கப்பட வேண்டியது : கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்களை டுவிட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் கமல்ஹாசனை அமைச்சர்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.

தற்போது தனியார் டெலிவிஷனில் தொகுத்து வழங்கி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நடிகர்கள் சக்தி, பரணி, நடிகைகள் காயத்ரிரகுராம், ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோரை மீண்டும் பிக்பாஸ் மேடைக்கு அழைத்து கமல்ஹாசன் பேசினார்.

அப்போது அவர்கள் தங்களை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு இருப்பதாக கமல்ஹாசனிடம் சொல்லி வருத்தப்பட்டனர். இதற்கு பதில் அளித்து பேசிய கமல்ஹாசன், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஒரு பொய் சொல்லி விட்டார் என்பதற்காக மக்கள் இவ்வளவு கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறிய பொய்க்காக இப்படி கோபப்படுகிறீர்களே? அப்படியென்றால் அரசியல்வாதிகளையெல்லாம் ஏன் விட்டு வைத்து இருக்கிறீர்கள்? இவ்வளவு கோபத்தை ஒரு சின்ன பெண் மீது காட்டுகிறீர்களே, குண்டர் சட்டத்தில் உள்ளே போகவேண்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்க, நம்மீது அதை பாய்த்துக் கொண்டு இருக்கிறார்களே?

கோபத்தை பாதுகாத்து வையுங்கள். இந்த கோபம் பாதுகாக்கப்பட வேண்டியது. அதை வெளிக்கொண்டு வர வேண்டிய காலம் விரைவில் வரும். நீங்கள் நியாயமான நேரத்தில் எதிர்த்து பேசியாக வேண்டும். கோபத்தை வீணடித்து விடாதீர்கள். கோபம் எல்லோருக்கும் தேவை. எனக்கும் தேவை. உங்களுக்கும் தேவை.

அதை சரியான நேரத்தில் சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும். அந்த கோபம் பல ஓட்டை போட்ட ‘ஷவர்பாத்’தாக ஆகிவிடக்கூடாது. அடித்தால் தீயணைக்கும் ஜெட்டாக மாற வேண்டும். உங்கள் கோபம்தான் என்னுடைய ஊக்கசக்தி. என்னுடைய எரிபொருள். அந்த கோபத்தை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். வீணடித்து விடாதீர்கள்.” என்று பேசினார்.