full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

ஸ்கெட்ச் போட்டாச்சு.. பொங்கலுக்கு வர்ரோம்!

ஜனவரி 12-ம் தேதி பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்கெட்ச்’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

விரைவில் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

பொங்கலுக்கு சூர்யா நடிப்பில் “தானா சேர்ந்த கூட்டம்” படமும் வெளியாவதால், ஸ்கெட்ச் படத்திற்கு கடுமையான போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.