full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த “சண்டக்கோழி 2” ரிலீஸ் தேதி!!

“இரும்புத்திரை” படம் வெற்றி பெற்றதை அடுத்து, சூட்டோடு சூடாக அடுத்த படத்தையும் ரிலீஸ் செய்து விட முனைப்பு காட்டி வருகிறார் நடிகர், தயாரிப்பாளர் விஷால்.

அந்த வகையில், தற்போது லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் “சண்டக்கோழி 2” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், விஷால் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை என லிங்குசாமி புகார் தெரிவித்ததாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் “சண்டக்கோழி 2” படத்தின் படப்பிடிப்பில் எந்த சிக்கலும் எழவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை தனது, “ஃபிலிம் பேக்டரி நிறுவனம்” மூலம் விஷாலே தயாரித்து நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தின் “சிங்கிள் டிராக்” விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீடு தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.