full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

விக்ரம் ரசிகர்களுக்கு “சாமி ஸ்கொயர்” தந்த சர்ப்ரைஸ்!!

“சாமி” படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் “சாமி ஸ்கொயர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் “சீயான்” விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், சூரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்களைத் தவிர நடிகர்கள் பிரபு, டெல்லி கணேஷ், இமான் அண்ணாச்சி மற்றும் உமா ரியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலை பாடி இருக்கிற சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்கள். “புது மெட்ரோ ரயில்” எனத் தொடங்கும் அந்தப் பாடல் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு “கந்தசாமி” படத்தில் தான் விக்ரம் பாடல்களை பாடி இருந்தார். அந்தப் படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருந்தார். அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் பின்னணி பாடி இருக்கிறார் விக்ரம். இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள் நிஜமாகவே!