தென்னிந்திய பட உலகின் மீதான ராதிகா ஆப்தேவின் பரபரப்பு குற்றச்சாட்டு

News

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களின் திரையுலக வாழ்வில் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். அது குறித்த தங்களது கருத்துகளையும் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகை ராதிகா ஆப்தேவும் தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ராதிகா ஆப்தே தமிழில் டோனி, வெற்றிச்செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அவர், அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்னிந்திய பட உலகம் பற்றி ராதிகா ஆப்தே, “தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமைகள் உள்ளன. நான் ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். படம் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தோம். அவர் திடீரென்று என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் அதிர்ச்சியானேன்.

நான் அந்த மாதிரி நிலைமைக்குப் போகவில்லை. அப்படிப்பட்டவர்களை உதாசீனம் செய்து விட்டேன். அதனால் தான் தென்னிந்திய மொழி படங்களில் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லை என்று கருதுகிறேன்.” என்று கூறியுள்ளார்.