full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்பு செய்திகள் 11/10/17 !

* ஜம்மு – காஷ்மீர் : பந்திப்போரா அருகே பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்.

* தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் பீர் விலை ரூ.5, குவாட்டர் விலை ரூ.12 உயர்த்த தமிழக அமைச்சரவை முடிவு.

* 15 – 18 வயது வரையுள்ள சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் வன்கொடுமையே : உச்ச நீதிமன்றம்.

* 7வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் : அரசு ஊழியர்களின் சம்பளம் 20% வரை உயரும்.

* கொலை மிரட்டல் வழக்கில் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

* திருமணமாகி ஓராண்டுக்குள் பெண் புகார் அளித்தால் அது பாலியல் வன்கொடுமையாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் : உச்ச நீதிமன்றம்.

* முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மீதான சோலார் ஊழல் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் : பினராயி விஜயன்.

* அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

* சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பரோல் நிபந்தனைகளுக்கு காரணம் தமிழக அரசே. தமிழகத்தில் டெங்கு ஆட்சி நடக்கிறது என ஸ்டாலின் கூறியது சரியே – தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ குற்றச்சாட்டு.

* ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் டெங்குக்கு சிகிச்சை பெறுவோருக்கு நாளை முதல் உதவ வேண்டும் – தேமுதிகவினருக்கு விஜயகாந்த் அறிக்கை.

* மனசாட்சிப்படியே கூறினேன் : ச‌சிகலாவால் தான் தற்போதைய அதிமுக அரசு அமைந்தது என்பதை தமது மனசாட்சிப்படியே கூறியதாக அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

* குட்கா விவகாரத்தில் முகாந்திரம் உள்ள 17 பேர் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்.

* குஜராத்தில் பெட்ரோலிய எரிபொருட்கள் மீதான வாட் வரியை 4% குறைப்பு. வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.9, டீசல் ரூ.2.72 குறைப்பு.

* பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து.

* குஜராத், மகாராஷ்ட்ராவை போல பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உடனடியாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.

* டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் : அமைச்சர் ஜெயக்குமார்.

* திமுக ஆட்சியில் கருணாநிதி பெட்ரோல், டீசல் மீதான விற்பனையை வரியைக் குறைத்ததாக முக.ஸ்டாலின் தகவல்.

* சேலம் மாங்குட்டைபட்டியை சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி ரூபாஸ்ரீ வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு.

* சேலத்தில் எம்ஜிஆர் விழாவில் விதி மீறல் டிஜிட்டல் பேனர் வைத்த வழக்கில் ஆட்சியருக்கு நோட்டீஸ்.

* பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி டெல்லி வணிகர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

* காவிரி ஆற்றில் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 18,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக உயர்ந்தது.

* கடலூர் : மேமாத்தூர் அணைக்கட்டு ராஜவாய்க்கால் உடைந்து விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

* சென்னை சேப்பாக்கம் : போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

* முல்லைப் பெரியாறு அணையில் ஐவர் துணை கண்காணிப்புக் குழுவின் ஆய்வு நடைபெற்று வருகிறது.

* புதுச்சேரி காலாப்பேட் சிறையில் ஆண் கைதியை பெண் கைதி சந்தித்தது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்.

* மதுரை ஆதினத்திற்கு சொந்தமான மடத்தில் பூஜை செய்ய நித்யானந்தாவுக்கு இடைக்காலத் தடை.

* அருணகிரிநாதர் நிர்வாகத்தில் நித்யானந்தா, அவரது சீடர்கள் தலையிடவும் இடைக்கால தடை விதிப்பு.

* தனிநபர் கழிவறை திட்டத்திற்காக, காசோலை வழங்க ரூ 2,500 லஞ்சம் வாங்கியதாக சிவகாசி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது.

* மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதின் கட்கரியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு.