full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

ஒளிப்பதிவாளர் ப்ரியன் மரணம்

கே.எஸ்.அதியமான் இயக்கிய ‘தொட்டாச் சிணுங்கி’ படத்தின் மூலம் திரையுலகுக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ப்ரியன். இவர், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு என பல முன்னனி நாயகர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னனி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வந்த ப்ரியன், கே கே நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். அவர் இன்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானார்.

இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான விருதுநகருக்கு இறுதி சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட இருப்பதாக கூறப்படுகிறது.