full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

பா.ரஞ்சித்துடன் இளம் அரசியல் தலைவர் சந்திப்பு!

குஜராத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் ஜிக்னேஷ் மேவானி.
தலித் அரசியலை முன்னெடுக்கும் இவர், குஜராத்தில் நடந்த “உணா” புரட்சியின் மூலம் வெளி உலகிற்கு இளம் புரட்சியாளராக அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த அவர், இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்து பேசியிருக்கிறார். முன்னதாக ஜிக்னேஷ் மேவானி, பா.ரஞ்சித் வீட்டிற்கு வரும் வழியில் அவருக்கு விமரிசையான
வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டெர் பக்கத்தில் கருத்து தெரிவிட்டுள்ள ஜிக்னேஷ் மேவானி, “இந்தப் பொங்கல் மறக்க முடியாத பொங்கல் என்றும், பா.ரஞ்சித்தை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.