full screen background image
Search
Monday 6 May 2024
  • :
  • :
Latest Update

கேரளாவைக் குறிவைக்கும் நயன்தாரா!!

தமிழ் சினிமாவின் ஆதர்ஷ நாயகி நயன்தாரா. சூப்பர் ஸ்டார் முதல் நேற்று அறிமுகமான நடிகர் வரை முதல் தேர்வாக விளங்குகிறார். அதனால் தான் ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என கொண்டாடப் படுகிறார். தமிழில் வெற்றிக் கொடி நாட்டி நிலைத்திருப்பவர், தனது கவனத்தை மலையாளத் திரையுலகின் பக்கம் திருப்பியுள்ளார்.

ஏற்கனவே மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும், இப்போது நிவின்பாலி நாயகனாக நடிக்கும் “லவ் ஆக்‌ஷன் டிராமா” மலையாள படத்தில் நாயகியாக நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளாது. இந்த படம் மே மாதம் தொடங்க இருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், இப்படத்தின் டி.வி. உரிமை இப்போதே பெரிய தொகைக்கு வாங்கப்பட்டிருக்கிறது.

அடுத்து, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கோட்டயம் குர்பானா’ மலையாள படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். கதாசிரியர் ஆர்.உன்னி எழுதியுள்ள இந்த படம் வேடிக்கை கொண்டாட்டம் என்று கலகலப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. இதில் நயன்தாராவுக்கு படம் முழுவதும் காமெடியில் கலக்கும் வேடம்.

சமீப காலங்களில் எந்த நாயகி பாத்திரத்திலும் பார்க்காத அளவுக்கு கேங்ஸ்டர் காமெடி படமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், தமிழில் இவர் நடித்து வரும் “இமைக்கா நொடிகள்”, “கோலமாவு கோகிலா”, சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படம் ஆகியவற்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.