full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

சிவகாசி போல மெர்சல், மஜா போல ஸ்கெட்ச்

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இதில் `துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரமாக நடந்து வருகிறது.

வடசென்னை பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். தமன் இசையமைத்து வரும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னதாகவே தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படமும் தீபாவளியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக தீபாவளி ரேசில் `ஸ்கெட்ச்’ படமும் இணைந்தால், விஜய் – விக்ரம் படங்கள் 11 வருடங்களுக்கு பிறகு மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2005 தீபாவளியின் போது விஜய்யின் சிவகாசியும், விக்ரமின் மஜாவும் ரிலீசாகியிருந்தது.