full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

டுவிட்டரில் மெர்சல், உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படம் மெர்சல்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

தெறி படத்திற்கு அடுத்து, விஜய், அட்லி வெற்றிக்கூட்டணியில் மற்றுமொரு படம் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டது.

இளையதளபதி என்பதை மாற்றி, தளபதி என்ற பட்டத்துடன், ஜல்லிக்கட்டு காளைகளின் பின்னணியில் விஜய் நிற்பது போன்று, ஜூன் மாதம் மெர்சல் என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனைத்தொடர்ந்து வெளியான ஆளப்போறான் மற்றும் நீதானே பாடலும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இப்படத்தின் இசை வெளியீடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது டுவிட்டரில் மெர்சல் படத்திற்கு எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் மெர்சல் ஆகும்.