full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

டிசம்பர் மாதம் திருப்பதியில் திருமணமா?

நடிகை அஞ்சலி, 2007-ம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். ‘அங்காடி தெரு’ படம் அவரைப் பிரபலப்படுத்தியது. கலகலப்பு, எங்கேயும் எப்போதும், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி ஆகியவையும் முக்கிய படங்களாக அமைந்தன.

இந்த நிலையில் அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“அஞ்சலிக்கும், ஜெய்க்கும் வருகிற டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.” என்று அஞ்சலியின் உறவினர்கள் தெரிவித்ததாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.