முன்னணி நடிகையின் முன்னுதாரண செயல்

News

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் சன்னி லியோன். ‘ஜெசிம் 2’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ராகினி எம்.எம்.எஸ்.2, ஜாக்பாட் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அக்‌ஷய்குமார், சாருக்கான் ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார். 36 வயதான சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபேருடன் சேர்ந்து, மராட்டியத்தில் வறட்சி பாதித்த லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்தார்.

இந்த குழந்தைக்கு நிஷா கவுர் வெபேர் என பெயர் சூட்டியுள்ளனர்.