full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

” வீரத்தமிழன் விதைச்சு விட்டது , ஆதித் தமிழன் அனுப்பி வச்சது “

 

” வீரத்தமிழன் விதைச்சு விட்டது , ஆதித் தமிழன் அனுப்பி வச்சது ” எனும் பாடலோடு தொடங்கியுள்ள தமிழ்த் திரையின் அடுத்த கபடி ஆட்டம்  ” கென்னடி கிளப் ”

சுசீந்திரன் இயக்கத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான கபடியை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது விருகம்பாக்கத்திலுள்ள ( ஐநாக்ஸ்) திரையரங்கில் நடைபெற்று வருகிறது.

சசிகுமார் , இயக்குநர் பாரதிராஜா, மீனாட்சி கோவிந்தராஜ் , சூரி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜா ,நடிகர் சசிகுமார், இயக்குநர் சுசீந்திரன் , இமான் , தாய் சரவணன் , மற்றும் படத்தில் நடித்துள்ள கபாடி வீராங்கனைகள் உள்ளிட்ட திரைக்குழுவைச் சேர்ந்த பலரும் பங்கேற்றுள்ளனர் …