கீர்த்தி சுரேஷ்க்கு சாவித்ரியாக நடிக்க மீண்டும் வாய்ப்பு

News

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான திரைப்படம் நடிகையர் திலகம். தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி என வெளியானது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரம் ஏற்றுத் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அனைத்து தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படம் மூலம் கீர்த்தி சுரேசின் மார்க்கெட் உயர்ந்தது. ராஜமெளலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட கிடைத்து இருக்கிறது.

தற்போது இன்னொரு முறை சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை அவரது மகன் பாலகிருஷ்ணா திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். படத்தை இயக்க இருப்பது தெலுங்கு இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி.

இவர் மகாநடி திரைப்படத்தில் இயக்குநர் நாகி ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கீர்த்தியின் அபார நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கிருஷ் தான் இயக்கும் என்டிஆர் வாழ்க்கை படத்துக்காக மீண்டும் ஒருமுறை கீர்த்தியை சாவித்திரியாக்க முடிவெடுத்து இருக்கிறார்.