full screen background image
Search
Monday 6 May 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் வரும் கத்துக்குட்டி!!

புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில், நரேன் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் “கத்துக்குட்டி”. நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன்ஆகியோர் தயாரித்திருந்த இப்படத்தில் சிருஸ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருந்தார்.

விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் துயரத்தையும் பேசிய இப்படம், பலரது பாராட்டையும் ஆதரவையும் பெற்றது.

“தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், “ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் இது” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் மனம் திறந்த பாராட்டினர். எண்ணற்ற பரிசுகளும் மரியாதைகளும் கத்துக்குட்டி படத்திற்க்கும் படத்தின் குழுவினருக்கும் அந்த சமயத்தில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படம் வருகிற 23-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது.