கர திரை விமர்சனம் 4/5
நடிகர்கள் :தனுஷ்,மமிதாபைஜி,கே. எஸ். ரவிகுமார்,கருணாஸ், ஜெயராம், மற்றும் பலர்.
இசை :ஜி.வி. பிரகாஷ்குமார்,
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்,
இயக்கம்: விக்னேஷ் ராஜா,
தயாரிப்பு :ஐசரி கணேஷ்.

தனுஷின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்த கர, 1990 கால கட்டத்தில் ராமநாதபுரம் என்கின்ற ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகளின் அவர்களின் தேவை அறிந்து ஒரு தனியார் வங்கியின் ஆசையில் பிடியில் சிக்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் தவிப்பை எடுத்து உரைக்க சொல்ல வந்த படம் தான் இந்த கர,இறுதியில் விவசாயி நிலை என்ன ஆனது இதனால் தனுஷின் வாழ்க்கை புரட்டி போட்டது அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு பின்னணி என்ன என்பது தான் மீதி கதை.
தன் கிராமத்தில் தாய் தந்தையுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார் தனுஷ்,இவருக்கு தந்தையாக கே.எஸ் ரவிக்குமார் நடித்துள்ளார் தந்தையிடம் தான் சொந்த தொழில் செய்யப்போகிறேன் என்று பணம் கேட்க அதனை தர மறுக்க தனுஷ் எடுத்துக் கொண்டு ஊரை விட்டு சென்று விடுவார், எதிர்பாராத விதமாக வாழ்க்கை மாறிவிடும் அவருக்கு அங்கு ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தான் சொந்த ஊருக்கே வந்துவிட அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று எண்ணி சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஆனால் அவரை விதி அங்கேயும் விட்டு வைக்கவில்லை தன் கிராமத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையம் கடன் சுமை சூழலும் தன் தந்தையுடன் சேர்ந்து ஊர் மக்கள் படும் பாடையை அறிந்து, மீண்டும் அவரை என்ன செய்கிறார் என்று திருப்புமுனையாக மாறுகிறது கதை களம்.
தனுஷின் நடிப்பு அவர் நடிப்பின் அசுரன் என்று சொல்லும் அளவுக்கு நடித்துள்ளார், பேசாமலே தன் கண் அசைவாலேயே நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் தன் தந்தையின் இறுதி நிலையே கண்டு நமமை கண்களில் கண்ணீர் வர வைக்கிறார் அந்த உணர்ச்சிபூர்வமான நடிப்பு போதும் தன் சிறந்த நடிகன் என்ற சொல்லுக்கு அடங்குவார்.
தந்தையாக கே,எஸ்.ரவிக்குமார் நடிப்பு நிஜ அப்பாவாகவே நடிப்பின் வழியே வாழ்ந்து காட்டியுள்ளார் சுராஜ் போலீஸ் அதிகாரியாக நம்மை மிரள வைக்கிறார், ஜெயராஜ் வங்கியின் மேல் அதிகாரியாக இப்படி ஒருத்தர் இருப்பாரோ என்று நம்மை பயமுறுத்துகிறார். எம் எஸ் பாஸ்கர் அவர்களின் புதிய தோற்றம் புதிய நடிப்பை ஒரு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகி மமிதா கதைக்கு அங்கங்கே வந்து சென்று விடுகிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் வேகத்தின் இணையாகவே வேகத்தைக் கூட்டி இருக்கிறார் , பெரிய பலம் என்று சொல்லலாம்.
ஒளிப்பதிவு தேனி ஈஸ்வரன் அவரின் கைவண்ணம் 1990 காலகட்டம் எப்படி இருக்குமோ அதை நம் கண் முன்னே நிறுத்திருக்கிறார், குறிப்பாக சொல்லப் போனாலே அந்த வங்கி அந்த 90களில் செய்தி பின்னணி இசை அதெல்லாம் மிக அற்புதம்.
மொத்தத்தில் கர இந்த மாய வலையில் சிக்கித் தவிக்கும் சாமானியார் மக்களின் பாதிப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது கரசாமி என்கின்ற கர. (தனுஷ்).

