காயல் திரைவிமர்சனம்
நடிகர்கள்:அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக்,
ஸ்வாகதா, ஐசக்,
இசை: ஜஸ்டின்,
ஒளிப்பதிவு :கார்த்திக்,
எழுத்து இயக்கம்:தமயந்தி
தயாரிப்பு :ஜெ ஸ்டுடியோ,
ஜேசு சுந்தரமாறன் .

இயக்குனர் தனது காயல் படத்தில் ஆரம்பத்திலேயே நாயகியை இறந்து போகும் கதாபாத்திரமாக கையாளுவது துணிச்சலான முயற்சியாகத் தெரிகிறது. கதை, லிங்கேஷ் மற்றும் காயத்ரி காதலால் தொடங்கி, சாதிய காரணங்களால் பிரிவிற்கு தள்ளப்பட்டு, காயத்ரி தற்கொலை செய்வதை மையமாகக் கொண்டது. இதைத் தொடர்ந்து கதாநாயகன் தனது காதலியின் நினைவுகளை தாங்கிக்கொண்டு வாழ்வதை படமானது உணர்ச்சிமிக்க காட்சிகளுடன் வெளிப்படுத்துகிறது.
லிங்கேஷ் – தனது கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, காதலியின் மறைவால் ஏற்படும் வேதனையை உணர்வுபூர்வமாகச் செய்துள்ளார்.
காயத்ரி – முதல் காட்சியிலேயே இறந்துபோனாலும், பின்தொடரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் தனது நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் நிற்கிறார்.
அமுதா என வரும் மற்றொரு நாயகியும், அப்பா கதாபாத்திரமும் தங்களின் சிறந்த நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர்.
அனுமோல் – பாசமிகு தாயாக நடித்தாலும், சாதிய மனநிலையோடு இருக்கும் தாய்மார்களின் நிழலை பிரதிபலித்துள்ளார்.
ரமேஷ் திலக் – சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.
தொழில்நுட்ப அம்சங்களில், இசை மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளன. எனினும், திரைக்கதையில் மேலும் சுவாரஸ்யம் சேர்க்கப்பட்டிருந்தால் படத்திற்கு வலு சேர்த்திருக்கும். நீளமான திரைக்கதை சில இடங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது என்பது குறை. சிறிய படங்களுக்கு வழக்கமான சமரசங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
மொத்தத்தில், வணிகச் சலுகைகளை புறக்கணித்து சாதிய எண்ணங்களுக்கு எதிராக ஒரு படத்தை உருவாக்கிய இயக்குனரின் நோக்கம் பாராட்டத்தக்கது.

