ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் ஒரிஜினல் ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை

cinema news

ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் ஒரிஜினல் ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை

தமிழ் ஒரிஜினல் தொடரின் மொத்த பார்வை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது

சென்னை, ஆகஸ்ட் 18, 2026: ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்‌ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உள்ளது.

ஒளிபரப்பான நாள் முதல், எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பார்வையாளர்களிடமும் ‘ரிசார்ட்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான கதைக்களங்கள், தங்களது சொந்த மொழி மற்றும் சந்தையைத் தாண்டியும் ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை ’ரிசார்ட்’ மீண்டும் நிரூபித்துள்ளது. ‘ரிசார்ட்’ தொடரின் மொத்த வாட்ச் டைமில் 53% தமிழக பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது. மீதமுள்ள 47% பார்வை நேரம் தமிழகத்திற்கு வெளியிலிருந்து கிடைத்துள்ளது. இதில் 22% இந்தி பார்வையாளர்களிடமிருந்தும், 15% தெலுங்கு பார்வையாளர்களிடமிருந்தும், 10% மலையாளம் மற்றும் கன்னட மொழி பார்வையாளர்களிடமிருந்தும் கிடைத்துள்ளது.

இந்த மைல்கல், ஜியோஹாட்ஸ்டாரின் ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ என்ற வித்தியாசமான கதை சொல்லல் வடிவத்திற்கான திட்டமிட்ட முதலீட்டின் வெற்றியை பிரதிபலிக்கிறது. வாரந்தோறும் பல எபிசோடுகளை வெளியிடுவதன் மூலம், தொடர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பழக்கத்தை பார்வையாளர்களிடம் உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக, தென்னிந்தியா முழுவதும் ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ எனப்படும் நீண்டகால தொடர்களின் எண்ணிக்கையை ஜியோஹாட்ஸ்டார் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம், குறுகிய காலம் என்பதைத் தாண்டி, நீண்டகாலம் பார்வையாளர்களை தக்க வைக்கவும் அவர்களை மீண்டும் கொண்டு வரவும் இது உதவுகிறது.

இந்த சாதனை குறித்து ஜியோஸ்டாரின் சவுத் கிளஸ்டர் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் பிரிவின் தலைவர் கிருஷ்ணன் குட்டி கூறியதாவது, “‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்திருப்பது ஜியோஹாட்ஸ்டாருக்கு மிக முக்கியமான மைல்கல். அதேபோல், எங்களது ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ திட்டத்திற்கும் வலுவான அங்கீகாரமாகும். கடந்த ஓராண்டாக, தொடர்ந்து பார்வையாளர்களுடன் பயணிக்கும், கலாச்சார ரீதியாக வேரூன்றிய கதைகள் நீண்டகாலம் ரசிகர்களையும் தக்க வைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீண்டகால ஒரிஜினல் தொடர்களில் முதலீடு செய்து வருகிறோம். எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதையம்சம் மற்றும் தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்க்கும் தன்மை ஆகியவற்றின் மூலம் ‘ரிசார்ட்’ இந்த அணுகுமுறையின் சரி என நிரூபித்துள்ளது.”

அவர் மேலும் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தத் தொடரின் மொத்த பார்வை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி, தமிழ் மொழிக்கு வெளியிலுள்ள பார்வையாளர்களிடமிருந்து கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையான கதைகள் மொழிகளைக் கடந்து நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் என்ற எங்களது நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தென்னிந்தியா முழுவதும் எங்களது ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ பட்டியலை தொடர்ந்து விரிவுபடுத்தும் நிலையில், உள்ளூர் பார்வையாளர்களுடன் வலுவாக இணைவதோடு, நாடு முழுவதும் ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரிஜினல் படைப்புகளை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்” என்றார்.

‘ரிசார்ட்’ தொடருக்கு டிடிகே பிரஸ்டீஸ் கோ-பிரசன்டிங் ஸ்பான்சராக உள்ளது. லலிதா ஜூவல்லரி மார்ட், காலீஸ்வரி ரிஃபைனரி மற்றும் பிரபாஸ் விகேர் ஹெல்த் கிளினிக் ஆகியவை ஸ்பெஷல் பார்ட்னர்களாக இணைந்துள்ளன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் இந்தக் கூட்டணி, தொடருக்கு மேலும் வலுசேர்ப்பதுடன், பல்வேறு சந்தைகளில் உள்ள பார்வையாளர்களுடனான அதன் தொடர்பையும் வலுப்படுத்துகிறது.

பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரிசார்ட்’ தொடரில் விஜய் குமார் ராஜேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்ஆர் ரிசார்ட்டில் ஹவுஸ்கீப்பிங் ஊழியராக பணியாற்றும் வெற்றி, ஒரு சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். அந்த ரிசார்ட்டின் பின்னணியில் இருக்கும் லட்சியங்கள், உறவுகள் மற்றும் பல்வேறு சவால்களை வெற்றி எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே ‘ரிசார்ட்’ தொடரின் கதைக்களமாகும்.

‘ரிசார்ட்’ தொடரை ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக பார்க்கலாம்.

ஆதாரம்: ஜியோஹாட்ஸ்டார் உள்நிலை தரவுகள்.

*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.