full screen background image
Search
Wednesday 8 May 2024
  • :
  • :
Latest Update

எழுத்தாளருடனான நட்பால் ஜீவாவுக்கு உருவான ஆசை

ஜீவா நடித்த `சங்கிலி புங்கிலி கதவதொற’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து நடிக்க விரும்பும் கதை பற்றி ஜீவா அளித்த பேட்டி….

தமிழ் சினிமா மாறியிருக்கிறது. ஒரு முழு படத்தையும் ஒரு சந்திற்குள் எடுத்துவிட்டு படத்திற்கு ` ஒரு சந்து’ என்று பெயரிட்டு வெற்றிப் பெறும் வகையிலான திறமையான இளம் படைப்பாளிகள் இருக்கிறார்கள். இதனால் தமிழ் சினிமாவின் பட்ஜெட் மாறிவிட்டது.

தமிழ் சினிமாவிற்கு கதாசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் தான் முதுகெலும்பு. ஒரு படத்திற்கு தேவையான கதையை எழுதுவது அவர்கள் தான். நாங்கள் நடிகர்கள் கதையை கேட்கிறோம். பிடித்தால் கால்ஷீட் தருகிறோம். அவ்வளவு தான் எங்களின் பணி.

ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கதையை எழுதக்கூடியவர்கள் அவர்கள். கதாசிரியருக்கும், இயக்குநருக்குமான ஊதிய இடைவெளியை குறைக்க வேண்டும். பாகுபலி போன்ற படங்கள் தமிழிலும் வரவேண்டும். பொன்னியின் செல்வன், மருதநாயகம் போன்ற கதைகள் நம்மிடம் நிறைய உள்ளன. லாப நஷ்டம் எதுவாக இருந்தாலும் சினிமாவை நேசிப்பவர்கள் அதைவிட்டு போகமாட்டார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகமும், நட்பும் கிடைத்தபிறகு மண் மணம் கமழும் கிராமிய கதைகளங்களில் நடிக்க விரும்புகிறேன்.

`சிவா மனசுல சக்தி’ என்ற படத்தின் மூலம் நடிகர் ஆர்யாவை கெஸ்ட் ரோலில் நடிக்கவைத்து இதனை தொடங்கி வைத்தது நான் தான். அதன் பின் நானும் ஆர்யாவும் ஏராளமான படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துவிட்டோம். இது ஆரோக்கியமான விசயமாக இருந்தாலும், தற்போது இதுவும் போரடித்து விட்டது.

`ராம் ‘போன்ற பர்பாமென்ஸ் ஓரியண்டட் திரில்லர் கதை என்றால் நடிக்க தயாராகயிருக்கிறேன். அதே போல் மாறுபட்ட கதையில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறது”.