full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது?

நடிகர் விஜய் தற்போது “சர்கார்” படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார். பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாக தொடங்கியது.

“ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட்” தயாரிக்க இருக்கும் அந்தப் படம் பற்றிய இன்னொரு தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க “எம்.எஸ்.தோணி”, “பரத் அனே நேனு” படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மெர்சல், சர்கார் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சர்கார் படப்பிடிப்பு முடிந்த பிறகே, விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே விஜய் 63 குறித்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.