ப்ரைடே -திரை விமர்சனம்
“கன் எடுத்தவர்க்கு கன்-ஆல் தான் முடிவு” என்பதை பல்வேறு லேயர்களில் சொல்லியிருக்கிறது Friday

மைம்கோபி ஒரு அரசியல் வாதி மற்றும் அதிகார பலம் கொண்ட ரவுடி. தனக்கு எதிரான ஒருவரை போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்கவேண்டும் என்பது அவர் டார்கெட். KPY தீனாவிற்கு தன் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்பது இலக்கு. அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை கரை சேர்க்க வேண்டும் என்பது டார்கெட். அவரின் தம்பிக்கு அண்ணன் போல் சம்பவக்காரன் ஆகவேண்டும் என்பது குறிக்கோள். இவர்களின் ஒட்டுமொத்த இலக்கும் ஒரே புள்ளிக்குள் வருவது தான் Friday படத்தின் திரைக்கதை

தனது திறமை மற்றும் அனுபவத்தால் தான் தோன்றும் எல்லாக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார் மைம்கோபி. KPY தீனாவிற்கு இது முக்கியமான படம். தரமான கேரக்டரை உள்வாங்கி தரமாக நடித்துள்ளார். நாயகி சித்து குமரேசன் தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன் உள்பட எல்லோரும் கவனிக்க வைக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ் கன்னியாகுமரி நிலப்பரப்பை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். டுமே பெயரில் மட்டுமல்ல..தனது இசையிலுமே வித்தியாசம் காட்டியுள்ளார். குறிப்பாக நிறைய காட்சிகளில் அவர் மெயிண்டெய்ன் செய்துள்ள ‘சைலண்ட்’ காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. ஷார்ப்பான எடிட்டிங்கால் படத்திற்கு எனர்ஜி கூட்டியுள்ளார் எடிட்டர் பிரவீன் M.
ஒருவரின் பாயிண்ட் ஆப் வ்யூவில் கதை பயணிக்காமல், கதையில் தோன்றும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு நரேட்டிவ் செய்திருப்பது Good way. முதல்பாதியில் சரிவர எமோஷ்னல் கன்வே ஆகாவிட்டாலும், விட்டதைப் பிடிக்கும் ஆட்டமாக செகண்ட் ஹால்ப் மாறியுள்ளது. ரவுடியின் பிள்ளை போலீஸ், போலீஸின் பிள்ளை ரவுடி என்பது உள்பட திரைக்கதை ரைட்டிங்கில் நிறைய ட்விஸ்ட் வைத்து எழுதியுள்ளார் இயக்குநர் ஹரி வெங்கடேஷ்
புனித வெள்ளியாக இல்லாவிட்டாலும், வெள்ளித்திரையில் ஒருமுறை கண்டு ஊக்குவிக்கும் விதமாகத் தான் அமைந்திருக்கிறது இந்த Friday

