full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

“காலா” ரகசியத்தை உடைத்த திலீப் சுப்பராயன்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக நடிகர் ரஜினிகாந்தை இயக்கியிருக்கும் படம் “காலா”. இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கியது. சமூக வலைதளங்கள் முழுவதும் “காலா” டீசர் கொண்டாடப்பட்டது.

ரசிகர்கள் அனைவரும் காலா திரைப்படத்தைக் காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிரார்கள். ஆனால், சினிமா உலகை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் இந்த ஸ்டிரைக்கினால் “காலா” குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் மாபெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த “ஸ்டண்ட் மாஸ்டர்” திலீப் சுப்பராயன், “காலா” படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில், ரஜினி மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதாகவும்.. படத்தில் மொத்தம் ஆறு சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், இதுவரையில் ரஜினி படங்களில் இல்லாத அளவிற்கு இதில் சண்டைக்காட்சிகள் பயங்கர மாஸாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.