கான் சிட்டி திரை விமர்சனம்
நடிகர்கள் : அர்ஜுன் தாஸ்,அன்னா பென், யோகி பாபு, வி டி வி கணேஷ், ராதாரவி, வடிவுக்கரசி, அகிலன், மற்றும் பலர்.
இசை : ஷான் ரோல்டன்,
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்,
இயக்கம் : ஹரிஷ் துரைராஜ்,
தயாரிப்பு :ஹரிஷ் துரைராஜ்.

இந்த திரைப்படம், கதை அம்சமும் பண ஆசை, ஏமாற்றுத் திட்டங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களை நகைச்சுவை கலந்த திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிக்கிறது.
பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு முந்தைய காலகட்டத்தை மையமாகக் கொண்டு நகரும் கதை, கதாநாயகன் நல்ல அரசாங்கம் பணியிலிருந்தும் தன் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறார் அதுபோல படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கும் பணத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் எப்படி நான்கு பேரும் ஒன்றாய் கூடினார்கள் இவர்கள் இணைந்த பணத்தையும் மீண்டு திரும்ப பெற்றார்கள் அதுவே கான்சிட்டியின் மீதி கதை .
கதாநாயகன் அர்ஜுன் தாஸ் வழக்கம் போல் இல்லாமல் இப்படத்தின் மூலமாக நகைச்சுவை கலந்து தன் நடிப்புச் திறமை வெளிப்படுத்தி உள்ளார், கதாநாயகி அண்ணா பென் தனக்குத் தந்த பணியை அவரும் சிறப்பாகவும் பணி நிறைவு செய்து உள்ளார்.நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்த காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு பாராட்டத்தக்கது.
மூத்த நடிகை வடிவுக்கரசி அவர்களின் நடிப்பாகும். குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏந்தும் அவரது கதாபாத்திரம், பல இடங்களில் சிரிப்பையும் சில தருணங்களில் உணர்ச்சியையும் உருவாக்குகிறது. படத்தின் முக்கிய பங்காகவும் பலமாகவும் அமைந்திருக்கிறது. இவருக்கு இணையாக யோகி பாபு தன் நையாண்டி நடிப்பை கலந்து சிரிப்புக்கு உத்தரவாதமாக இருக்கிறார்கள் . விடிவி கணேசன் நடிப்போம் கதையோடு கதையாகவும் ஒன்றிணைந்து மேலும் பலம் கூட்டுகிறார் .
இசை ஷான் ரோல்டன் படத்தின் மனநிலைக்கு ஏற்ற இசையை வழங்கியுள்ளார். பாடல்கள் கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் பயணிக்கின்றன.
ஒளிப்பதிவு அரவிந்த் விஸ்வநாதன் ஒரு காலகட்டத்தின் காட்சிகளை காட்சி அமைக்கப்பட்டு இருப்பது அவர் திறமை வெளிப்படுத்துகிறார் காட்சிக்கு காட்சிக்கு சிறப்பாகவே அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் .
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து அதை வணிக அம்சங்களுடன் இணைத்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் இந்த கான்சிட்டி நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாகவே அமைந்திருக்கிறது நம்மை ரசிக்க வைக்கும் .

