அங்கீகாரம் திரைவிமர்சனம்

cinema news movie review

அங்கீகாரம் திரைவிமர்சனம்

நடிகர்கள் :Kjr,விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான், சிந்தூரி, ரமா, மற்றும் பலர்.

இசை : ஜிப்ரான் வைபோதா,

ஒளிப்பதிவு :விஸ்வநாத்,

இயக்கம் :தென்பாதியன்,

தயாரிப்பு : எஸ் கே பிரசாந்த், அஜித் பாஸ்கர், அருண்முருகன்.

சென்னையில் திருவல்லிக்கேணி என்னும் பகுதியில்   ஒரு சாதாரண வீட்டில்  அடிப்படை வசதி இல்லாமல்  தன் தாய் தங்கையுடன் வாழ்க்கை வாழுத்து வருக்கிறார் கதாநாயகன் தாய் தூய்மை பணியாளராக தன் மகனும் மகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார்,கதாநாயகன் kjr தன்னை தடகள வீரராக முழுமையாக அர்பணித்து அதையில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிர பயிற்சியில் முயற்சியுடன் ஈடுபடுகிறார் மற்றும் அவர் கனவு என்பது  காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற அவரது கனவை அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகளும், சமூக அநீதிகளும் சிதைக்கின்றன. பிறகு அவர் கனவு நிறைவேறியதா  இல்லையா என்பதை தான் இந்த அங்கீகாரம் மீதி கதை.

படத்தின் முதல் பாதி விளையாட்டு மைதானம்  சார்ந்த காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்தாலும் நாம் இதற்கு முன்பு பார்த்தது போல் நினைவுக்கு வந்து போகும் இருந்தாலும் கதையின் வேகம் கொஞ்சம் கூட குறை இல்லாமல்  ஓட்டம் கொடுக்கும். அப்படியே இரண்டாம் பாதியில் பார்த்தால் அவர் களம் காலம் இடமே நீதிமன்றம் தனக்கு கிடைக்க வேண்டும் வாய்ப்பை நிராகரிக்கப்படுகிறது, அதை பெற வேண்டும் என்று நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்று நடத்தி வருகிறார், நீதிமன்றத்தின்  போராடும் களமே விறுவிறுப்பின் உச்சம்.

KJR தனது முதல் படத்திலேயே கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது. அவருடன் விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு முழு நியாயமும் செய்துள்ளனர். ஒவ்வொருவரின் பங்களிப்பும் கதைக்கு வலுசேர்க்கிறது

இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தின் உணர்வுகளை இசை வழியாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் விஸ்வநாத், மைதானக் காட்சிகளிலிருந்து நீதிமன்றக் காட்சிகள் வரை ஒவ்வொரு ஃப்ரேமையும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது.

அங்கீகாரம் படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது அந்த கதையின் கருத்து தான் சொல்ல வேண்டும் குறிப்பாக சாதிக்க துடிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை இந்த சமூகத்தில் உள்ள  வீழ்ச்சியில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களின் வலி வேதனை என்னவென்று சொல்லப்படும் படம் தான் இந்த அங்கீகாரம் .

இயக்குனர் கதை  கருத்தையும் தேர்வு செய்ததற்கு அவருக்கு நிச்சயம் மிகப்பெரிய ஒரு பாராட்டு வெள்ளித்திரையில் தான் என்ன சொல்ல வேண்டும் என்பதை மிகத் தெளிவாகவும் உணர்ச்சியுடன் கோபத்துடன் சொல்லிக் காட்டி இருக்கிறார் .

மொத்தத்தில் அங்கீகாரம் வெறும் படம் அல்ல சொல்ல வந்திருக்கும் ஒரு பாடம்.