சக்கப்போடு போடு ராஜா – விமர்சனம்!

முதலில் “சக்கப்போடு போடு ராஜா” படத்தை “வேலைக்காரன்” படத்தோடு ரிலீஸ் செய்த தைரியத்திற்காக சந்தானத்திற்கு பாராட்டுகள். காமெடி டூ ஹீரோ சேஞ்ச் ஒவரில் சந்தானத்திற்கு ஐந்தாவது படம். ஆனாலும் நம் கண்கள் அந்த பழைய சந்தானத்தையே தேடுகிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் சந்தானம் ஹீரோவாக மனதிற்குள் இறங்க மறுக்கிறார். அவரும் தன்னை ஹீரோவாகக் காட்ட பறந்து பறந்து சண்டை போடுகிறார், உருண்டு பொறண்டு நடனம் ஆடுகிறார், பஞ்ச் வசனமெல்லாம் பேசி ஸ்லோவ் மோஷனில் நடந்து போகிறார். ஆனாலும் […]

Continue Reading

வேலைக்காரன் விமர்சனம்!

  காமெடி இல்லை, கலாட்டா இல்லை, நக்கல் இல்லை, நையாண்டி இல்லை. இன்னும் சொல்லப் போனால் இது சிவ கார்த்திகேயன் படமே இல்லை. சரி படத்தில் என்ன தான் இருக்கு?, இருக்கு.. நாம் பேச, சிந்திக்க, எடுத்துக்கொள்ள நிறையவே இருக்கு! மாபெரும் மனிதக் கூட்டத்தால் நிரம்பி வழிகிற இந்த ஒட்டுமொத்த உலகமுமே, யாரோ ஒரு சில ஆயிரம் பேருக்கு மட்டும் ஒரு வளம் மிக்க வியாபார சந்தையாக இருந்து கொண்டே இருக்கிறது. அந்த சந்தையை தொய்வில்லாததாக மாற்றிக்கொள்ள […]

Continue Reading

அருவி – விமர்சனம்!

மலைமுகட்டின் மேலிருந்து பிரவாகமெடுக்கிற நீர்த்திரள்கள் இணைந்து இருப்பிடம் தேடி சரிந்து விழும். அது தான் அருவியின் ஆரம்பம்!. அத்தோடு நின்றுவிடுவதில்லை அந்த அருவி. அது பயணிக்கிற இடமெல்லாம் பசுமையை இரைத்துப் போகிறது, தன் ஈரம் மிச்சமிருக்கிற கடைசி தடம் வரையிலும். அப்படித் தான் இந்த அருவியும் உணர்வுகளின் திரளாய், தான் பயணிக்கிற இடமெங்கிலும் அன்பை விதைத்துப் போகிறாள். உயிர் வாழ்கிற கடைசி நொடி வரையிலும்! பொதுவாகவே இந்த சமூகம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து எப்போதுமே விவாதிக்க […]

Continue Reading

கொடிவீரன் – விமர்சனம்!

சினிமாவை வெறும் சினிமாவா மட்டும் பாருங்க.. அலசி ஆராயாதீங்க! என்கிற வாதத்தின் பின்னால் நின்று கொண்டு தான் முத்தையா போன்ற இயக்குநர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். குட்டிப்புலி தொடங்கி மருது வரை முத்தையா எடுத்திருக்கும் படங்கள் எல்லாமே “மண்வாசனை” என்ற பெயரில் “ரத்த வாடை” கொண்டவையாகவே இருந்திருக்கின்றன. மிக நுணுக்கமான அவரது “கொம்பு சீவும்” வேலையை கொடிவீரன் படத்திலும் தயவு தாட்சண்யமே பார்க்காமல் “செய்திருக்கிறார்”. சரி.. இப்போது கொடிவீரனை வெறும் திரைப்படமாக மட்டுமே பார்ப்போம். முத்தையா படம், கண்டிப்பா […]

Continue Reading

அண்ணாதுரை விமர்சனம்

முதன்முறையாக விஜய் ஆண்டனி இருவேடங்களில் நடித்திருக்கும் படம். ஒரு இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். இதற்காகவே இவருக்கு ஒரு பெரிய பாராட்டை தரலாம். மேலும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் தனது R ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண்ணை கற்பழிக்க முயலும் ஆட்களை அடித்து துவைக்கிறார் நமது அண்ணாதுரை. அது போலவே படம்  முழுவதும் சண்டையில் மிரட்டுகி றார் விஜய் […]

Continue Reading

திருட்டுப்பயலே 2 – விமர்சனம்

2006ல் வெளியாகி வெற்றி பெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகமாக, சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் திருட்டுப்பயலே 2. நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா, அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். நேர்மையாக இருப்பதால் ஏளனத்திற்கும், தொடர்ந்து இடமாறுதலுக்கும் ஆளாகிறார் பாபி சிம்ஹா. இதனால் மனம் வெறுத்துப் போகும் அவர், இனியும் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது […]

Continue Reading

ஜூலி 2- விமர்சனம்

“ஆமாங்க, இங்கே பாலியல் தொல்லை இருக்குங்க” என்று முன்னாள் நடிகைகளும், இந்நாள் நடிகைகளும் குற்றச்சாட்டுகளை அவ்வப்போது சொல்வார்கள். அது வெறும் பரபரப்புச் செய்தியாகி, இரண்டொரு நாளில் காணாமல் போகும். இந்தத் தொல்லைகள் என்பது எல்லா விதமான பணியிடங்களிலுமே பெண்கள் அனுபவிப்பது தான் என்றாலும், குறிப்பாக திரைத்துறையில் பெண்ணாக இருந்து சாதிப்பதென்பது எந்தளவிற்கு சவாலானது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஆண் துணையில்லாமல் சினிமாவில் அறிமுகமாகி சிக்கல்களை சந்திக்கிற ஒரு சாதாரண பெண்ணின் கதை தான் “ஜூலி2”. […]

Continue Reading

இந்திரஜித் – விமர்சனம்

பொதுவாகவே நம் தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு இருக்கிற அளவிற்கான எதிர்பார்ப்பு என்பது அட்வெஞ்சர், ஃபேன்டஸி திரைப்படங்களுக்கு இருப்பதில்லை. இயக்குநர் இராம.நாராயணன் அவர்கள் விலங்குகளை வைத்து பக்திப் படங்கள் எடுத்துப் பெற்ற வெற்றிகள் எல்லாம், “முன்னொரு காலத்தில்” என்று சொல்கிற அளவிற்கு ரசிகனின் மனநிலை இப்போது மாறிப்போயிருக்கிறது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கு அதிலிருக்கும் நம்பகத்தன்மையைப் பொறுத்து தான் அது வெற்றிப்படமா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுகிறது. எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும், அந்த திரைக்குள் தானும் இருப்பதாக ரசிகன் […]

Continue Reading

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்!

இந்தத் தலைமுறையினரில் பலருக்குக் “குற்றப் பரம்பரை சட்டம்” குறித்தோ அதன் வரலாற்றுப் பின்னணி குறித்தோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக “குற்றப் பரம்பரை” குறித்து ஒரு சிறிய அறிமுகம், குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்பது இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பொழுது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல் இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட இந்திய சமூகத்தினரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் […]

Continue Reading

அறம் – விமர்சனம்!

எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களின் துன்பியலை உதாசீனப்படுத்தியும் ஊனப்படுத்தியுமே பழக்கப்பட்ட சினிமாவில், அச்சீழ்பிடித்த பழக்கத்தை இடக்கையால் புறந்தள்ளி விட்டு எப்போதாவது ஒருசில சினிமா மட்டுமே கேட்பாரற்ற எளிய மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கான ‘அறம்’ பேசும். அதிகார வர்க்கமும், ஆளும் வர்க்கமும் மக்களுக்கெதிராக எப்படி வளர்ந்து நிற்கிறதென்பதை மேம்போக்காக சொல்லிக் கடந்து போகாமல், தனித்தனி செங்கலாகப் பிரித்து தைரியமாகக் கைநீட்டிச் சாட இதுபோல் இன்னும் நூறு ‘அறம்’ தேவைப்படுகிறது நமக்கு. ஒரு நாட்டின் அரசாங்கம், தனது ஒட்டுமொத்த […]

Continue Reading