ஜெய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் `பலூன்’. இறுதிகட்டத்ததை எட்டியுள்ள இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், பிறந்தநாளை, நேற்று முன்தினம் பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார். சினிஷ் இயக்கத்தில், உருவாகி வரும் இப்படத்தை ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து […]

Continue Reading

ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘கர்ஜனை’

த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுகரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் பாலு கூறும்போது, ‘இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார். ஐந்து […]

Continue Reading

மனித ஒழுக்கத்தை சொல்லும் ‘தனயன்’

ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ், ஜெயா பிலிம்ஸ், மேஸ்னர் புரொடக்‌ஷன்ஸ் ஹவுஸ் இணைந்து பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகும் படம் ‘தனயன்’. தனயன் என்றால் மகன் என்று பொருள். ஒரு மகன் எப்படி வாழ வேண்டும் எனவும், ஒரு மகன் எப்படி வாழ கூடாது எனவும் இரு வேடங்களில் ‘ராமகிருஷ்ணா’ புகழ் ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி, ஆகியோருடன் சாம்ஸ், பவர்ஸ்டார், தினேஷ் […]

Continue Reading

அண்ணன் இல்லாத வாழ்க்கை எனக்கு கஷ்டமாக இருக்கிறது: இரங்கல் கூட்டத்தில் கமல் பேச்சு

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், வக்கீலுமான சந்திரஹாசன் கடந்த மாதம் மார்ச் 19-ந் தேதி லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவுக்கு இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், கமல், ரஜினிகாந்த், சாருஹாசன், அனுஹாசன், அக்ஷராஹாசன், சுஹாசினி, ராம்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கிரேஸி மோகன், மௌலி, பிரமிட் நடராஜன், லிசி, அம்பிகா, ரோகிணி, புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது கமல் பேசும்போது, என்னுடைய […]

Continue Reading

குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன்

ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றதை அடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு 1 ரெக்கார்ட்ஸ் மூலம் பெற்றுள்ளார். […]

Continue Reading

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது: தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார்

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் ஆய்வுக் கூடம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை தயாரிப்பாளர்கள் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் […]

Continue Reading

மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரையில் கால் பதித்த ஜெகதீஸ்

“நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. இதில் நான்கு கதா நாயகர்களில் ஒருவராக ஜெகதீஸ் நடித்திருக்கிறார். “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” பட வாய்ப்பு குறித்து ஜெகதீஸ் கூறுகையில், “ஓர் நாள் மணிரத்னம் அவர்களின் இணை இயக்குனர் தினேக்ஷ் செல்வராக்ஷ் அவர்களிடமிருந்து ஒரு போன், அவரை சென்று பார்த்தப் பின் தான் தெரிந்தது, தினேக்ஷ் அவர்கள் தனது படத்திற்கு திறமையான ஒரு புதுமுகம் தேடியபோது வினோதினி வைத்தியனாதன் அதற்கு […]

Continue Reading

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு செங்கல் கொடுக்கப்பட்டு, […]

Continue Reading

விஷாலுக்கு எதிரான ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!

தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ்.தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு பத்திரிகையாளர்களிடம் செல்போனில் பேசினார். வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களம் இப்போது சூடு பிடித்துள்ளது. பரபரப்பான இத்தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கியுள்ள ‘தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக இன்னொரு […]

Continue Reading

பொன் ஒன்றை கண்ட விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ‘கதாநாயகன்’ படம் உருவாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முருகானந்தம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தவிர விஷ்ணு விஷால், அமலாபாலுடன் இணைந்து ‘சின்ட்ரெல்லா’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இவர் கவுதம்மேனன் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் […]

Continue Reading