வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான் இயக்குனர்களுக்கு முதல் கதாநாயகன் : இயக்குநர் பொன்ராம்

ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய ‘ஒரு காதலின் புதுப்பயணம்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி, பிரஜின், நிஷாந்த் தயாரிப்பாளர் இளைய அரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். *விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது* “இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு தரமுடியவில்லை. அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து […]

Continue Reading

மீண்டும் இணைகிறது பழைய வண்ணாரப்பேட்டை

பிரஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. இதில் பிரஜனுக்கு ஜோடியாக அஸ்மிதா நடித்திருந்தார். மேலும் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மோகன் இயக்கியிருந்த இப்படத்தை ஜுபின் இசையமைத்திருந்தார். ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரித்த இப்படத்தை அனாமிகா பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ஜுபின் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படமும் ரசிகர்களிடம் பேசும்படியாக அமைந்தது. தற்போது அனாமிகா பிச்சர்ஸ் நிறுவனம் ஹன்சிகா புரொடக்சன்ஸ் என்ற […]

Continue Reading

அப்பாவை மலையாளத்தில் ரீமேக் செய்யும் சமுத்திரகனி

ஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த பேனரில் இயக்க ஆர்வம் கொண்டவர் சமுத்திரக்கனி இவர் இயக்கி, நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படம் அப்பா. பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்த இப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கிறார். இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பித்துள்ளார் சமுத்திரக்கனி.

Continue Reading

என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் : ரஜினி அதிரடி

ரஜினி தற்போது ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் அறக்கட்டளை சார்பாக நடக்கும் நிகழ்ச்சிக்கு, இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகளை வழங்கு விழாவிற்கு ரஜினி செல்வதாக இருந்தது. ரஜினியின் இலங்கை பயணத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ரஜினி இலங்கை செல்ல மாட்டேன் என்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது…

Continue Reading

புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்கும் எடிட்டர் டான் போஸ்கோ

ஒரு சிறந்த எடிட்டரால் தரமான படத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை சினிமா உலகில் உள்ளது. மேலும் ஒரு படத்தின் இயக்குனருக்கு வலது கையே அப்படத்தின் எடிட்டர் தான். அப்படி புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்க இருக்கிறார் எடிட்டர் டான் போஸ்கோ. ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது. […]

Continue Reading

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணி, சீமான் என பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பாஜக அணி சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினியை சந்தித்து, ஆசி பெற்றார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய கங்கை அமரன், ரஜினிகாந்த் தன்னை […]

Continue Reading

செய்தியாளர்கள் மீது தாக்குதல் : வருத்தம் தெரிவித்த இயக்குனர் சங்கர்

சென்னையில் நடந்த 2.O படப்பிடிப்பின்போது தனியார் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை படக்குழுவினர் தாக்கியதால், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், சங்கரின் உதவி இயக்குனரும், அவரது உறவினருமான பப்புவை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, என்னுடைய படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பேன். இருப்பினும், இந்த மாதிரியான ஒரு […]

Continue Reading

திரைப்பட கல்வி நிலையம் துவங்கும் இயக்குனர் இமயம்

“பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்” தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலை புகுத்தி தன்னுடைய படைப்புகளினால் தமிழ் சினிமாவிற்கு புதிய திசை ஏற்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கார்த்திக், ராதா, ரேவதி, கவுண்டமனி, ஜனகராஜ், காஜல் அகர்வால், பிரியா மணி, நெப்போலியன், ரஞ்சிதா, […]

Continue Reading

கமல் ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்

நடிகர் கமல் ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் காலமானார். லண்டனில் உள்ள அவரது மகள் அனுஹாசன் வீட்டில் சந்திரஹாசன் காலமானார். லண்டனில் மாரடைப்பால் காலமான சந்திரஹாசனுக்கு வயது 82 ஆகும். சந்திரஹாசன் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் பார்ட்னர் ஆவார்.

Continue Reading

ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை

‘கபாலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துகாத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினியின் சமீபகால படங்களான ‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யராய், ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோனே, ‘லிங்கா’ சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் நடிகைகள் நடித்து வந்தனர். அந்த […]

Continue Reading