full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

பொன் ஒன்றை கண்ட விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ‘கதாநாயகன்’ படம் உருவாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முருகானந்தம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தை தவிர விஷ்ணு விஷால், அமலாபாலுடன் இணைந்து ‘சின்ட்ரெல்லா’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் இவர் கவுதம்மேனன் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்திற்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

சிவாஜி நடிப்பில் வெளியான ‘படித்தால் மட்டும் போதுமா’ என்ற படத்தில் மிகவும் பிரபலமான பாடலான ‘பொன் ஒன்றை கண்டேன்’ என்ற வரிகளை விஷ்ணு விஷால் தலைப்பாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.