திரைப்படம் தயாரிக்கிறார் வைகோ

வேலுநாச்சியார் மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.வேலுநாச்சியார் வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ. அவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷால், “வைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தைப் பார்க்க […]

Continue Reading

சிம்புவின் இசை வெளியீட்டுத் தேதி!

தமிழ் சினிமாவில் டி.ராஜேந்தர் தொடாத துறையே இல்லை என்னும் அளவிற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை, தயாரிப்பு அத்தனையையும் செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தவர். டி.ராஜேந்தரைப் போலவே அவரது மகனாகிய நடிகர் சிலம்பரசனும் கதை, வசனம், இயக்கம் பாடல்கள் என பலதுறை கலைஞனாக நிரூபித்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருப்பது எல்லோரும் அறிந்தது தான். தான் அறிமுகப்படுத்திய சந்தானத்தின் நடிப்பில் உருவாகிற ”சக்கப் போடு போடு ராஜா” படத்தின் மூலம் இசையமைப்பாளராக […]

Continue Reading

விக்ரம் மகனுக்கு ஜோடியாக கமல் மகள்?

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் `அர்ஜுன் ரெட்டி’. தெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்பால் இப்படத்தை தமிழ், மலையாளத்தில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நாயகனாக துருவ் விக்ரம், இயக்குனராக பாலா என இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் எதிர்பார்ப்பை […]

Continue Reading

ரஜினி, கமலிடம் வேண்டுகோள் வைத்த அல்போன்ஸ் புத்திரன்

சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மேலும், “சினிமாவையும் சூதாட்டத்தோடு ஒரே ஜி.எஸ்.டி வகையில் வைத்திருப்பது சரியா? தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் பிரதமர் மோடியை சந்தித்து, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு […]

Continue Reading

இம்சை அரசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் தமிழ் சினிமாவின் நகைச்சுவையை முழுவதுமாய் ஆக்கிரமித்து வைத்திருந்த சமயம். 1991-வது ஆண்டின் முற்பகுதியில் ஒல்லியான தேகத்துடனும் வசீகரமான முக அமைப்பென்று எதுவும் இல்லாமலும் “போடா போடா புண்ணாக்கு” என்று ராஜ்கிரண் நடித்த “என் ராசாவின் மனசிலே” படத்தில் ஆடிய போது யாரேனும் அந்த பையன்தான் பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவையை ஆளப் போகிற தமிழனென்று நினைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் நடந்தது அதுதான். தான் நடிக்கத் தொடங்கிய அந்த இடத்திலிருந்து இன்று […]

Continue Reading

சிவகார்த்திகேயன் வெளியிடும் “சிங்கிள் ட்ராக்”!

”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கி வரும் படம் “ஒரு பக்கக் கதை. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ”வாசன்ஸ் விஷுவல் வென்சர்ஸ்” நிருவனம் தயாரிக்கிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் வேளையில், படக்குழுவினர் முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். நாளை 11.10.2017 புதன்கிழமை மாலை 6 மணிக்கு படத்தின் ஒரெ […]

Continue Reading

“ரியல் ஆக்‌ஷனில்” இறங்கிய நடிகர் சந்தானம்!

நகைச்சுவை நடிப்பிலிருந்து நாயகனாக வளர்ந்துள்ள நடிகர் சந்தானம் பாஜக பிரமுகரைத் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும், அதற்கு தமிழக பாஜக தலைவரின் கண்டனமும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படித்திருக்கிறது. முன்னதாக பண விவகாரத்தில் ஆத்திரமடைந்து கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த காரணங்களைக் கேட்டறிந்ததிலிருந்து.. சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டராக தொழில் செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து […]

Continue Reading

விக்ரமுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

நடிகர் “சீயான்” விக்ரமுடன் தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள “ஸ்கெட்ச்” திரைப்படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியாகுமென்று அறிவித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, ”வாலு” படத்தை இயக்கிய விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ”ஸ்கெட்ச்” படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை நவம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை டிசம்பர் மாதத்தில் கிருஸ்துமஸ் விருந்தாக திரைக்குக் கொண்டு வர வேகமாக உழைத்து வருகிறது படக்குழு. கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை 25ஆம் தேதி வருகிறது. எனவே அதற்கு […]

Continue Reading

திருமணம் குறித்து நடிகர் விஷால் பேச்சு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் தமிழ் சினிமா குறித்தும், தனது திருமணம் குறித்தும் பேசினார். நடிகர் விஷால் விழாவில் பேசியதாவது… ”நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்த பிறகு தான்  திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளேன். அதனை நினைவூட்டுவதற்காகவே  கார்த்தியின் முன்பு அடிக்கடி வேஷ்டி சட்டை அணிந்து  நிற்கிறேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை மேடையில் கார்த்தியும் […]

Continue Reading

மாரி 2-ல் இசையமைப்பாளரை மாற்றிய தனுஷ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பாலாஜி மோகன். இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார். இரண்டாவது லீட் ரோலாக கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மாரி’ முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். […]

Continue Reading