நாங்கள் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் : கோபி நயினார்

இயக்குநர் பா ரஞ்சித் அறம் படம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி…#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று டுவிட்டரில் பதிவிட்டார். அவரது வாழ்த்து பதிவில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் பெயர் இடம்பெறாதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் கோபி நயினார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். […]

Continue Reading

சேராதோர் சேர்க என்று கமல் அழைப்பு

அடிமேல் அடி வைத்து, அரசியலுக்கு வருவதற்கான அத்தனை வேலைகளையும் மிகவும் சூதானமாக செய்து வருகிறார் கமல்ஹாசன். அரசியல்வாதிகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து, மக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வரை தேர்ந்த அரசியல்வாதியை விட, மிக நுணுக்கமாக காய்களை நகர்த்துகிறார். கொள்கை கருத்தியல் என்னவென்றே அறிவிக்காமல், கூட்டத்தை கூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தனது பிறந்தநாளான நவம்பர் 7ல் முக்கிய அறிவிப்பு என்று சொல்லிவிட்டு, மையம் விசில் என்ற ஒரு செயலியின் பேரை மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, பட […]

Continue Reading

பேசியே ஆகவேண்டுமென்று முடிவெடுத்த பாரதிராஜா

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் […]

Continue Reading

பாலா படத்தின் முக்கிய அறிவிப்பு!

“தாரை தப்பட்டை” படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கி வரும் படம் “நாச்சியார்”. ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஜோதிகா நடித்து வரும் இந்த படத்தை பாலாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமாகிய “பி ஸ்டுடியோஸ்” தயாரிக்கிறது. வழக்கம்போல படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், படம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். நாச்சியார் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி தான் அந்த அறிவிப்பு. “பி ஸ்டுடியோஸ்” சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “நாளை (15.11.2017) மாலை […]

Continue Reading

மீண்டும் இணைந்த “விர்ஜின் பசங்க” கூட்டணி!

“அடல்ட் காமெடி” ட்ரெண்டிற்கு புள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். “திரிஷா இல்லனா நயன்தாரா” என்று படமெடுத்து இளைஞர்களை “கிளர்ந்தெழச்” செய்தார். முதல் படத்திலேயே இந்த மகத்தான சாதனையை செய்த ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படமாகிய சிம்பு நடித்த “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தை ரசிகர்கள் சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தினால் வெற்றிபெறாமல் போனது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தை சத்தமே இல்லாமல் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ஆதிக். “த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் […]

Continue Reading

விமர்சனங்களுக்கு மதிப்பளித்த இயக்குனர்!

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதிலும், படத்தை எல்லா மட்டத்திற்கும் கொண்டு சேர்ப்பதிலும் விமர்சகர்களுக்கும் ஒரு பங்குண்டு. அதுவும் படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகனுக்கு படத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் கொண்டு சேர்க்கப்பட்டு விடுகிறது இப்போதெல்லாம். இதனாலேயே பல இயக்குனர்களுக்கு விமர்சகர்களின் மீது மனக்கசப்பு ஏற்படுவதுமுண்டு. எதார்த்தம் இதுவாக இருக்க, கடந்த வாரம் வெளியான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால்” படத்திற்கு வந்துகொண்டுள்ள எதிர்மறை விமர்சனங்களை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். விமர்சகளின் கருத்திற்கு மதிப்பளித்து […]

Continue Reading

மீண்டும் தாய்லாந்தில் கெளதம் கார்த்திக்

ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத் துவங்கியது. இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை […]

Continue Reading

தமிழக மாணவர்களுக்காகக் களமிறங்கிய பா.இரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர், […]

Continue Reading

போலீஸ் பாதுகாப்பில் சிம்பு!

மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக பிரச்சாரம் செய்யப்படுகிற, எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்திய வரலாற்றில் மக்கள் மீதான மிக மோசமான நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டுகிற “பணமதிப்பிழப்பு” திட்டம் செயல்படுத்தப்பட்டு கடந்த எட்டாம் தேதியோடு ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டது. இந்த நாளை எதிர்க் கட்சிகள் எல்லாம் கருப்பு நாளாக அனுசரித்தன. இந்நிலையில் அந்த நாளில் “தட்றோம் தூக்குறோம்” படக்குழுவினர் வெளியிட்டுள்ள “டிமானிட்டைஷேசன் ஆந்தம்” பாடலுக்கு தமிழக பாஜக கண்டனங்களையும், எதிர்ப்பையும் கிளப்பி வருகிறது. பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து […]

Continue Reading

ஏப்ரலில் வெளிப்படுகிறதா கமலின் விஸ்வரூபம்?

2013-ல் கமல்ஹாசன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த `விஸ்வரூபம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர இருப்பதாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் வேலைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் அதன் படப்பிடிப்பு முழுமையடையாமல் போனது. சமீபத்தில் விஸ்வரூபம்-2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் […]

Continue Reading