சகாப்த நாயகனின் அடுத்த பட சிங்கிள்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் சகாப்தம் படத்திற்கு அடுத்ததாக உருவாகியிருக்கும் படம், மதுர வீரன். வி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை மீனாட்சி அறிமுகமாகிறார். இவர்களுடன் சமுத்திரகனி, பி எல் தேனப்பன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கருவாக கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பி ஜி முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு […]

Continue Reading

தீரன் குறித்து டிஜிபி ஜாங்கிட் விமர்சனம்

சதுரங்க வேட்டை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் H.வினோத் உருவாக்கியிருக்கும் படம் “தீரன் அதிகாரம் ஒன்று”. உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தியோடு முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள தீரன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரீமியர் காட்சியைப் பார்த்த பிறகு பேசிய சூர்யா, “தீரன் அதிகாரம் ஒன்று, ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, காவல்துறை அதிகாரிகள் […]

Continue Reading

விஜய்க்கு பிடித்த கதையில் “கயல்” சந்திரன்!

நடிகர் விஜய் கேட்டு, வியந்து பாராட்டிய கதை தற்போது படபிடிப்புக்கு தயாராகிவிட்டது. நடிகர் விஜய்யின் பாராட்டை பெற்ற இந்தக் கதையினை இளம் இயக்குனரான மஹாவிஷ்ணு இயக்க, கயல் பட நாயகன் “சந்திரன்” நாயகனாகவும், பிரேமம் பட புகழ் “அஞ்சு குரியன்” நாயகியாகவும் நடிக்க இருக்கும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தின் காட்சிகள் சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் படமாக்கப்பட உள்ளதாக இப்பட்டத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் சுரேஷ் ராஜா மற்றும் பிரகாஷ் மனோகரன் கூறியுள்ளனர். மேலும் இக்கதை இதுவரை தமிழ் சினிமா […]

Continue Reading

தமிழுக்கு நிதி வழங்கிய கமல்ஹாசன்

அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர். இதற்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கி பெரும் சுமையை குறைத்துள்ளது. இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கி உள்ளார். இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பங்கேற்றுப் பேசும் போது, “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் […]

Continue Reading

நடிகர் கமலுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு!

நடிகர் கமல்ஹாசன் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்ததிலிருந்து அவர் மீது வழக்கிற்கு மேல் வழக்கு தொடுக்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குறித்த கமலின் கருத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், முகாந்திரம் இருந்தால் அவர் மேல் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. கடந்த மாதம் கூட, “இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனியும் சொல்ல முடியாது” என்ற கமலின் கருத்திற்கு உத்தரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சில இந்து அமைப்புகள் கமலை சுட்டுக் […]

Continue Reading

நடிகையின் மகன் கைது!

ரிஷி, கந்தா கடம்பா கதிர்வேலா, பாய்ஸ், தலைநகரம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை புவனேஸ்வரி. அடிக்கடி வழக்குகளில் சிக்கும் இவர் மீது கடந்த மாதத்தில் இலங்கைப் பெண் ஒருவரை அடைத்து வைத்து பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த வழக்கில் தான் புவனேஸ்வரி தற்போது நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் நடையாய் நடந்து வருகிறார். இந்நிலையில் நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன், மருத்துவக் கல்லூரி மாணவியின் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றதாக வழக்கு […]

Continue Reading

அரசியல் மேடையாகிய “அண்ணாதுரை” ஆடியோ ரிலீஸ்!

தமிழ் சினிமா விளம்பரத்தை மெர்சலுக்கு முன், மெர்சலுக்குப் பின் என்று பிரிக்கலாம். தயாரிப்பாளர் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காத விளம்பரத்தை மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு வசனம் பெற்றுத் தந்தது. அதிலிருந்தே ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியலையும்,அரசியல்வாதிகளையும் லேசாக சீண்டினால் போதும்படத்திற்கு விளம்பரம் செலவே இல்லாமல் கிடைத்துவிடும் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அதிலும் சில நடிகர்களும், இயக்குனர்களும் குறிப்பிட்ட அரசியல் கட்சியினரிடமும், தலைவர்களிடமும் “சார், எங்க படத்துக்கும் புரமோஷன் பண்ணிக் கொடுங்க ப்ளீஸ்” என்று நேரடியாகவே கிண்டலாய் கூறியதும் […]

Continue Reading

சைத்தான் போல அண்ணாதுரை

ஜி ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, டயானா சாம்பிகா நடித்து வரும் படம் அண்ணாதுரை. இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி, ராதா ரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ரிந்து ரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தை ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் ஆண்டனியே படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. […]

Continue Reading

படம் பார்க்கும் ஆவலுடன் கெளதம் மேனன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் தற்போது `நரகாசூரன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தை கெளதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படம் குறித்து கெளதம் மேனன் டுவிட்டரில் […]

Continue Reading